புலம்பெயர்ந்த பெற்றோர்கள் உதவி நாடும் சிறுமி ரீதுவின் உயிரைக் காப்பாற்றுங்கள்
சென்னை: சென்னையில் வசித்து வரும் ரீது என்ற சிறுமிக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 3 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி உயிர் பிழைக்க வேண்டும் என்றால் சுமார் 3.50 லட்சம் தேவைப்படுகிறது. அவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார், தாய் இல்லத்தரசியாக இருக்கும் நிலையில் சிறுமியின் உயிரை காக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். உங்களது சிறு உதவி கூட சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவும்.
ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் ரீதுவுக்கு 10 வயது ஆகிறது. அருகில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.

மற்ற குழந்தைகளை போலவே எப்போதும் போல் பள்ளி சென்று மற்ற சிறுமிகளோடு சேர்ந்து படித்து வரும் ரீதுவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்களிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமி ரீதுவுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடுகள் (VSDs), நுரையீரல் வால்வு சுருக்கம், இதயத்தின் வலது பகுதியில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். படித்து, வேலைக்கு சென்று தாய் தந்தையை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்கால கனவுடன் படித்து வந்த சிறுமி ரீதுவுக்கு இப்படியொரு இதய நோய் இருப்பதனால் தாயும், தந்தையும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ரீதுவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், சிறுமி உயிர் பிழைக்க வேண்டும் என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ.3,50,000 வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரீதுவின் தந்தை கூலி தொழிலாளி. அவர் ஒரு நாளைக்கு சுமார் 700 ரூபாய் சம்பாதிக்கிறார். ரீதுவின் தாய் இல்லத்தரசி. அவரது சம்பளமும் வீட்டு செலவுக்கே சரியாக போய்விடுகிறது.
வறுமையில் இருந்தாலும் மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தனர். இப்போது அவளது உயிரை காப்பாற்ற என்ன செய்வதென்று திகைத்து வருகிறார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிரை காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறியிருப்பதால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். நீங்கள் நினைத்தால், ரீதுவின் அறுவை சிகிச்சை, மருத்துவமனை செலவுகள் மற்றும் குணமடைய தேவையான உதவிகளை செய்ய முடியும்.

உங்களது சிறிய தொகை கூட சிறுமி ரீதுவின் உயிரை காப்பாற்ற உதவும். உங்கள் ஆதரவு ரீதுவின் இதயம் மீண்டும் துடிக்க உதவும். ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கி, மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க உதவுங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பிஞ்சு சிறுமியின் வாழ்க்கை மீண்டும் தளிர்க்க உதவுவோம்.












Click it and Unblock the Notifications