100% இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி- தமிழக அரசின் அலட்சியத்துக்கு ஹைகோர்ட் 'செம' சாட்டையடி
சென்னை: கொரோனா உருமாறித் தாக்கி வரும் நிலையில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி கொடுத்த அலட்சியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி கொடுத்துள்ளது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,14,044. இதுவரை கொரோனாவுக்கு 1,50,606 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 8,23,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12,200 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைந்து இருந்தாலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

உருமாறிய கொரோனா
இதனால் இந்த கல்வி ஆண்டு முழுவதுமே பள்ளிகூடங்கள் அனைத்தும் மூடப்பட்டும் இருக்கின்றன. தற்போது புதிய உருமாறிய கொரோனாவின் தாக்கமும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. பல நாடுகள் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தி இருக்கின்றன.

தமிழக அரசுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் திடீரென 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கூட அனுமதி மறுத்த தமிழக அரசு திடீரென திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் திறக்கலாம் என உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மத்திய அரசு கண்டனம்
தமிழக அரசின் முடிவால் கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் திரைத்துறையினருக்காக தமிழக அரசு எதனையும் ஆராயாமல் தமது முடிவில் உறுதியாக இருந்தது. தமிழக அரசின் அலட்சியத்துக்கு ஏற்கனவே மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

ஹைகோர்ட் தடை
தற்போது தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் பள்ளிக்கூடங்களையே திறக்க முடியாத சூழ்நிலை இருக்கும் நிலையில் எப்படி திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் அனுமதிக்கலாம்? எனவும் சுளீர் கேள்வியை கேட்டிருக்கின்றனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள். அதேபோல் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் வரை தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்கிற அறிவுறுத்தலையும் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தடையால் 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க முடியும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அலட்சியம் காட்டக் கூடாது என்பதை இனியாவது தமிழக அரசு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications