குட் நியூஸ்! 1,000 அலுவலர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!
ஒரே அரசாணையில் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை : வணிக வரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உதவியாளர்களாக உள்ள 1,000 பேர் வணிக வரி அலுவலர்களாகவும், வணிகவரி துணை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்ததன்படி, உதவியாளர்களாக உள்ள 1,000 பேருக்கும் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே அரசாணையில் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வணிகவரித் துறையில் உதவியாளர் பணியிடங்களில் பணியாற்றி வந்தவர்களுக்கு துணை வணிக வரி அலுவலர்களாக தரம் உயர்த்தப்படுகின்றனர். இதுபோன்று, பணி மூப்பு அடிப்படையில் உதவியாளர்களாக உள்ளவர்களுக்கு வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வருவாயை பெருக்குவதற்காக வணிக வரித்துறையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 1000 பேர்
பதவி உயர்த்தப்படும் 1,000 பேரில் 160 பேர் வணிக வரி அலுவலர்களாகவும், 840 பேர் துணை வணிகவரி அலுவலர்களாகவும் தரம் உயர்த்தப்படுகின்றனர். பதவி உயர்வு அளிக்கப்படுவதன் காரணமாக 1,000 பேருக்கும் ஊதியம் உயர்த்தப்படுகிறது என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், புதிய பதவி உயர்வு அளிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.29.92 கோடி கூடுதல் செலவு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அன்புமணி வலியுறுத்தல்
வணிக வரித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே அரசு உறுதியளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது. வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித்துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை வாயிலாக அரசை வலியுறுத்தியிருந்தார்.

முதல்வருக்கு நன்றி
இந்நிலையில், தமிழ்நாடு அரசு, வணிகவரித் துறையில் உதவியாளர் பணியிடங்களில் பணியாற்றி வந்த 1000 பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரே அரசாணையில் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications