1000 கிலோ அதிசயம் மீனவரின் வலையில் சிக்கியது.. நடுக்கடலில் ஒரே ஆச்சரியம்.. இதென்ன பாம்பு போல இருக்கே
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள், கடலோரங்களில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் அதிகமான கல் சிலைகள், சிமெண்ட் சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக தென்பட்டு வருகின்றன.. இதுகுறித்த ஆய்வுகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும்நிலையில், கேரளாவில் நடந்த சம்பவம் வியப்பை தந்து வருகிறது. இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது, வித்தியாசமான மீன்கள் அவர்களது வலையில் சிக்குவது வழக்கமாகும்.. சிலசமயம் அரிய வகை மீன்கள் வலையில் சிக்கிவிடும்.. சிலசமயம், மருத்துவ குணம் வாய்ந்த அரிய மீன்களும் வலையில் சிக்கும்.

இப்படி சிக்கும் மீன்களை கரைக்கு கொண்டு வரும் மீனவர்கள், ஏலம் போட்டு விற்பனை செய்வார்கள்.. சிலசமயம், கூடுதல் விலைக்கு பங்கு போட்டு விற்றுவிடுவார்கள்.
கடல் ஆமை தந்த வியப்பு
கடந்த மாதம்கூட, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு சென்றிருக்கிறார்கள்.. அப்போது மீனவர் கல்யாணகுமார் என்பவர் நடுக்கடலில் வலையை வீசி காத்திருந்தார். அவரது வலையில் திடீரென 150 கிலோ எடையிலான ராட்சத ஆமை சிக்கிவிட்டது.. இதைப்பார்த்து பதறிப்போன கல்யாணகுமார், இது குறித்து உடனடியாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வன அலுவலர்களின் அறிவுரைப்படி மீனவர் கல்யாண குமார் மறுபடியும் அந்த ஆமையை பாதுகாப்பாக கடலில் விட்டார். இதனால் வனச்சரக அலுவலர்கள், மீனவர் கல்யாண குமாரை வெகுவாக பாராட்டினார்
இந்த ராட்சத வகை ஆமைகள் எப்போதும் தாவரங்களை மட்டுமே உணவாக உண்ணும். அவற்றின் முட்டைகள் டென்னிஸ் பந்து சைஸில் இருக்குமாம்.. பெரிய ஆமைகளின் குட்டிகள் கிட்டத்தட்ட 3 அங்குல நீளத்தில் இருக்குமாம்.
1000 கிலோ திருக்கை மீன்
நேற்றுகூட இலங்கை அம்பாறை பகுதியை சேர்ந்த மீனவர் வலையில் ஆச்சரிய மீன் சிக்கியது.. மீனவர்கள் கடலில் வலையை வீசியபோது, அதிக எடையாக இருந்துள்ளது.. இதனால் மீனவர்கள் வலைக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தபோது ராட்சத திருக்கை மீன் சிக்கியதை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்..
அந்த திருக்கை மீன் 1000 கிலோவுக்கு மேல் அதிக எடை கொண்டதாக இருந்ததாம்.. இதனால், அனைத்து மீனவர்களும் சேர்ந்து போராடி, அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.
5 தலை நாக சிலை - ஆச்சரியம்
நேற்றைய தினம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மற்றொரு ஆச்சரியம் நடந்துள்ளது.. நிரமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அழிக்கல் கடப்புரம் பகுதியில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் படகில் சென்றிருக்கிறார்கள்.. சக்கச்சன் பரக்கல் பகுதியை சேர்ந்த ரசாக் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியபோது, அதிக எடையில் ஏதோ ஒன்று சிக்கியிருக்கிறது..
உடனே அவர் வலையை வெளியே இழுத்து பார்த்த போது, ஒன்றரை அடி உயரமுள்ள 2 நாக சிலைகள் வலையில் சிக்கியது தெரியவந்தது. அதில் ஒரு சிலையில் 5 தலை நாக சிலையாகும். இதை கண்ட ரசாக் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தானூர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளார்.
கடலில் எப்படி சிலைகள்
உடனே போலீசாரும் விரைந்து வந்து, 2 சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பித்தளையால் செய்யப்பட்ட சிலைகள் என்பது தெரியவந்தது. ஆனால் இந்த சிலைகள் எப்படி கடலுக்குள் சென்றது? சிலைகளை யாராவது திருடி வந்து கடலில் வீசினார்களா? என்பது குறித்தெல்லாம் போலீசாரும், வருவாய்த் துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலிலிருந்து 2 சிலைகள் கிடைத்த தகவல் தீயாய் பரவிவிடவும், சுற்றுவட்டார பகுதியிலிருந்தவர்கள் கடற்கரைக்கு விரைந்து வந்து, சிலைகளை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications