சஸ்பென்ஸ்.. கோர விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்! பதிவு செய்த 101 தமிழர்கள் - கணக்கு இடிக்குதே
சென்னை: ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பயணித்ததாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்து இருக்கும் நிலையில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை நோக்கி நேற்று வந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசேர் அருகே சென்றுகொண்டு இருந்த இந்த ரயில் விபத்தில் சிக்கியது.

ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் மற்றும் யஷ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலுடன் இந்த ரயில் மோதியதில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஐ தாண்டிவிட்டது. பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சென்னையை நோக்கி வந்த ரயில் என்பதால் இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான பயணிகள் பயணித்திருக்கக் கூடும் என்பதால் மறுபக்கம் தமிழ்நாடு அரசு இதில் களமிறங்கி இருக்கிறது.
நேற்றே தமிழ்நாடு அரசு விபத்துக்குள்ளானவர்கள் குறித்த தகவல்களை அறிய உதவி எண்களையும் அறிவித்தது. அதன்படி, விபத்துக்குள்ளானவர்கள் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள 044 28593990, 94458 69843 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என தமிழ்நாடு மீட்புக்குழு அறிவித்து இருந்தது.
அதேபோல் புதுச்சேரி அரசும் 1070, 1077, 0413 2251003, 2255996 ஆகிய உதவி எண்களை அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த ரயில் விபத்து குறித்து பேட்டியளித்த சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ், ஒடிசாவில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வர தமிழ்நாட்டை சேர்ந்த 101 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.
இதில் 17 பேர் பயணம் செய்யவில்லை. 53 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 14 பேருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை." என்றார். கணேஷ் தெரிவித்த தகவலின்படி 17 பேர் பயணம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
காயமடைந்தவர்கள், பாதுகாப்பாக இருப்பவர்கள், தொடர்புகொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கையை கூட்டினால் 76 பேர் பற்றி மட்டுமே தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அப்படியென்றால் மீதம் உள்ள 8 பேரின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை என ஒடிசா சென்ற குழுவில் இடம்பெற்று இருக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், "ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ரயிலில் பயணித்தவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், உறவினர்கள் ஒடிசாவிற்கு வர அறிவுறுத்தல்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications