10, 12ம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும் - அன்பில் மகேஷ் உறுதி
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2019 - 20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டது. கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

ஜனவரி மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் கடைசி வாரத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வும் நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல தங்களுக்கும் நேரடி வகுப்பு ரத்தாகலாம் என்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டினைப் போல இந்த ஆண்டும் ஆல்பாஸ் ஆகிவிடலாம் என்று மாணவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடி பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நடப்பாண்டு நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக கூறியுள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications