10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஹால் டிக்கெட்களை பிப். 24 முதல் பெறலாம்.. எப்படி டவுன்லோடு செய்வது?
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் (பிப்ரவரி 24) ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 4ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்கி 21ஆம் தேதி முடிவடைய உள்ளன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பள்ளிகள் வாயிலாக வழங்கப்படும். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை நாளை மறுநாள் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நடைபெறவுள்ள மார்ச்/ ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை: தனித்தேர்வர்கள் www.dge.tn.govh என்ற இணையதளத்திற்குச் சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள "SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 HALL TICKET DOWNLOAD"என்ற வாசகத்தினை "Click" செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச்/ ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் (Science Practical Examinations( 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரு தேர்வரும் தேர்வெழுத மார்ச்/ ஏப்ரல்-2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.h என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளலாம் என தேர்வுத்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications