சில நாட்களில் அக்னி நட்சத்திரம்.. 11 நகரங்களில் சதமடித்த வெயில்! எங்கு அதிகபட்ச வெப்பம் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மட்டும் மொத்தம் 11 நகரங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ஆம் தேதி தான், அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே கடந்த சில வாரங்களாக அங்கு கடும் வெயில் காணப்படுகிறது.
இந்த கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதிய நேரங்களில், சில அடிகள் கூட வெளியே போக முடியாத அளவுக்கு வெயில் மண்டையைப் பிளக்கிறது.

வேலூரில் உச்சம்
இன்றைய தினமும் மாநிலத்தில் வெப்பம் வெளுத்து வாங்கியது. பகல் நேரங்களில் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவியது. தமிழ்நாடு முழுக்க இன்றைய தினம் மட்டும் சுமார் 11 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் வெப்பம் 107.6 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. இந்த கடுமையான வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது,

அடுத்து திருத்தணி
அதைத் தொடர்ந்து திருத்தணியில் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. மேலும், திருச்சி நகரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் மதுரை நகரில் 101.12 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி இருந்தது.

மொத்தம் 11 நகரங்கள்
தஞ்சை மாவட்டத்தில் 104 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி பகுதியில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது. சென்னையைப் பொருத்தவரை மீனம்பாக்கம் பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கம் பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இவை தவிர நாமக்கல், கடலூர், ஈரோடு, சேலம் நகரங்களிலும் வெப்பம் சதம் அடித்துள்ளது. மொத்தம் 11 நகரங்களில் வெப்பம் சதம் அடித்துள்ளது.

மழை
அதேபோல தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மாலை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications