சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அதிகம் உள்ள இந்த 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. எதற்கு மட்டும் அனுமதி? முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    June 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் Lockdown நீட்டிக்கப்படும்- Mk Stalin | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் வேகத்தைக் குறைக்க முதலில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு அது ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    ஊரடங்கு காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தது. இருப்பினும், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள், இதர மாவட்டங்கள்.. எவை எவற்றுக்கு அனுமதி? முழு விவரம்கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள், இதர மாவட்டங்கள்.. எவை எவற்றுக்கு அனுமதி? முழு விவரம்

    11 மாவட்டங்கள்

    11 மாவட்டங்கள்

    இதனால் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி

    அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி

    இந்த 11 மாவட்டங்களில் வரும் ஜூன் 7ஆம் தேதி அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், இந்த 11 மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Array

    Array

    அதன்படி தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    Array

    Array

    மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும். இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

    அரசு அலுவலகங்கள்

    அரசு அலுவலகங்கள்

    அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். தீப்பெட்டி, தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

    எதற்கு அனுமதி இல்லை

    எதற்கு அனுமதி இல்லை

    தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களில் எலக்ட்ரிஷன், பிளம்பர்கள் தங்கள் பணிகளைச் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சிகளில் பதிவுடன் மக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோக வேறு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Corona lockdown extended.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X