திடீர் ட்விஸ்ட்.. தவெக விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்ய கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தந்த பரபர உத்தரவு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.. இதையடுத்து, விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவை ஆய்வு செய்ய கோரிய மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

தனது வேட்புமனுவின் ஒரு பகுதியாக, தன்னிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள், அதேபோல் தனது மனைவி சங்கீதாவிடம் உள்ள சொத்து விவரங்கள் உள்ளிட்ட அனைத்து நிதிசார் தகவல்களையும் முறையாக பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்திருந்தார்.
தவெக தலைவர் விஜய்
இவ்வாறு விஜய் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி இதன் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மேலும் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மோசடி - கடன் தொகை
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 32) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:- பெரம்பூர் தொகுதி வாக்காளாராக அங்கு போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரின் சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை தனக்கு உள்ளது. வேட்பாளர்கள் உண்மையான தகவல்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
வேட்பாளர்கள் Form 26-ல் வழங்க வேண்டிய தகவல்கள் முக்கியமான அரசியல் சட்டப் பொறுப்பாகும். முக்கிய விவரங்களை மறைத்தல், ஒளித்தல், தவறாக குறிப்பிடுதல் அல்லது மாற்றம் செய்தல் ஆகியவை தேர்தல் நடைமுறையில் மோசடியான செயலாக கருதப்படும். விஜய் தன்னை நேர்மையானவராகவும், வெளிப்படையானவராகவும் காட்டிக்கொள்கிறார். ஆனால், விஜய் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்கமான நிறுவனங்களுடன் பெரும் தொகை கடனாக வழங்கியுள்ளதாக தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார்.
சங்கீதாவுக்கு 12.6 கோடி கடன்
விஜய், தனது தேர்தல் வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது மேலும் பரபரப்பை கிளப்பியது.
இந்த வழக்கின் போக்கைப் பொறுத்து விஜய்க்குச் சில சட்டச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்பட்டது.. ஒருவேளை மனுதாரரின் புகாரில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கருதினால், குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்படலாம். இது விஜய்யின் சொத்து விவரங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த கூடுதல் ஆய்வுக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் கணிக்கப்பட்டது,
பரபர உத்தரவு
நீதிமன்றம் இன்று பிறப்பிக்கும் உத்தரவு, விஜய்யின் அரசியல் மற்றும் நிதிசார்ந்த நம்பகத்தன்மைக்கு மிக முக்கியமானதாகவும் பார்க்கப்பட்டது.. இந்நிலையில் நீதிபதி எஸ்ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வு இந்த மனுவை இன்று காலை விசாரித்தது. இறுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவை ஆய்வு செய்ய கோரிய மனுவை, அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications