12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. 3 பேருக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு.. தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த 12 பேரில் 3 பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தீயணைப்புத் துறை டிஜிபியாக கரண் சிங்காவையும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே. விஸ்வநாதனையும் நியமித்துள்ளனர்.

அது போல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னியபெருமாள் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ்குமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக சங்கர், சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் டிஜிபியாக ஜெயராம், சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக அமல்ராஜ் பதவியுயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
என்போர்ஸ்மென்ட் விங்கின் ஏடிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் தமிழக சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸார் நலத்துறையின் ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவும், கடலோர காவல் படையின் ஏடிஜிபியாக சஞ்தீப் மித்தலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அது போல் கே சங்கர் ஐபிஎஸ் ஏடிஜிபியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு சென்னை தலைமையகத்தின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக ஆர்வி வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பணியிடமாற்றங்களில் கே சங்கர், அமல்ராஜ், ஜெயராமன் ஆகியோர் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications