12 பொதுத்துறை வங்கிகளை இணைத்து.. 4 ஆக குறைக்கும் திட்டம்.. கடன் வாங்க காத்திருந்தவர்களுக்கு.. செக்
சென்னை: இந்தியப் பொதுத்துறை வங்கிகளில், அடுத்த சில மாதங்களில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடைபெற வாய்ப்புள்ளது. சிறிய அரசு வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இதன் காரணமாக சிறிய வங்கிகளில் லோன் எடுக்க காத்திருப்பவர்கள் பாதிக்கப்படலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI), பேங்க் ஆஃப் இந்தியா (BOI), பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BoM) போன்ற வங்கிகள்,பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆகியவற்றுடன் இணையலாம் எனக் கூறுகிறது. இது பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

இணைக்கப்படும் வங்கிகள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI), பேங்க் ஆஃப் இந்தியா (BOI), பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BoM) ஆகிய நான்கு சிறிய வங்கிகள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BoB) போன்ற பெரிய வங்கிகளுடன் இணைய வாய்ப்புள்ளது.
அரசு இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது இவை உள்ரீதியாகவே விவாதிக்கப்பட்டு வரும் பரிந்துரைகள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் போட்டித்தன்மை கொண்ட வலிமையான பொதுத்துறை வங்கிகளை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கம். இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு இவை அவசியமாகும். இம்முயற்சி வங்கிகளின் நிதிநிலையை பலப்படுத்தி, கடன் வளர்ச்சிக்கு உதவும். செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல், தனியார் வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு எதிரான போட்டித்தன்மையை அதிகரித்தலும் இதன் நோக்கமே. இது நிதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் நிதி ஆயோக் பரிந்துரைகளுடன் ஒத்துள்ளது.
கடன் வாங்குவது சிக்கல்
ஆனால் இதன் காரணமாக சிறிய வங்கிகளில் லோன் எடுக்க காத்திருப்பவர்கள் பாதிக்கப்படலாம். அதாவது முன்பெல்லாம் சிறிய வங்கிகளில் எளிதாக கடன் வாங்க முடியும். அவை பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டால் அப்படி கடன் வாங்குவது எளிதாக இருக்காது
நிதி ஆயோக் முன்னர், SBI, PNB, BoB, கனரா வங்கி போன்ற சில பெரிய பொதுத்துறை வங்கிகள் மட்டுமே அரசின் முழு கட்டுப்பாட்டில் நீடிக்க வேண்டும் என்றும், IOB, CBI போன்ற சிறு வங்கிகள் தனியார்மயமாக்கல், மறுசீரமைப்பு அல்லது இணைப்புக்கு பரிசீலிக்கப்படலாம் என்றும் பரிந்துரைத்தது.
தற்போதைய திட்டம் நிதி ஆயோக்கின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டாலும், அவை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த வங்கிகள் இணைக்கப்படலாம்
நாட்டின் 12 பொதுத் துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை எனத் தகவல் வெளியாகி உள்ளது. 2027 நிதியாண்டுக்குள் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 12-லிருந்து 4 ஆகக் குறைக்கும் மாபெரும் திட்டமொன்றை இந்திய அரசு வகுத்து வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பாங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஒரு பெரிய இணைக்கப்பட்ட வங்கி ஆகிய நான்கு மட்டும் இருக்கும் வகையில் மற்ற பொதுத்துறை வங்கிகள் இதனுடன் இணைக்கப்படும். இத்தகவல் 2025 டிசம்பர் 1 அன்று வெளியானது. வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கைக்கு திட்டம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
நிதி அமைச்சகத்தின் இத்திட்டம், வங்கிகளின் டெபாசிட்டை, வருவாயை வலுப்படுத்தி, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் பெரிய வங்கிகளை உருவாக்கவே 12 பொதுத்துறை வங்கிகள் நான்காக குறைக்கப்படும் என்று அரசு வட்டாரம் தெரிவித்து உள்ளது.
கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றை மத்திய அரசு ஒன்றிணைத்து, நான்கு முக்கிய வங்கிகளில் ஒன்றாக மாற்றும். இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியும் இதில் இணைந்து, SBI, PNB, BoB உடன் நான்காவது பெரிய வங்கியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (CBI), பாங்க் ஆஃப் இந்தியா (BoI), பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BoM) போன்ற நடுத்தர வங்கிகள் SBI, PNB அல்லது BoB உடன் இணைக்கப்படும். பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
இத்திட்டம் முதலில் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்ததும், அமைச்சரவைச் செயலாளர், பிரதமர் அலுவலகம் (PMO) மற்றும் SEBI போன்ற அமைப்புகளின் கருத்துகளைப் பெற்று, பல அடுக்கு சரிபார்ப்புக்கு உள்ளாகும்.
விவாதித்ததற்கான பதிவுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும். நிதி அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகே அமைச்சரவை மற்றும் PMO-க்குச் இந்த பரிந்துரை கொண்டு செல்லப்படும். சந்தை தாக்கங்களைக் கருதி, செபியின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அதன்பின்பே முடிவுகள் எடுக்கப்படும்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications