ஸ்பெஷல் பஸ் ரெடி.. பயணிகள் கவனத்திற்கு.. நாளை முதல் ஞாயிறு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), ஜூன் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Chennai transport kilambakkam

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 535 பேருந்துகளும், நாளை மறுநாள் 570 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று 160 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமை அன்று 535 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 570 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 80 பேருந்துகளும், நாளை மறுநாள் 80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து முன்பதிவு: மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பேருந்துகளும், நாளை மறுநாள் 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,684 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6,699 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை 11,102 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்: தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து, அனைத்து பள்ளிகளும் ஜூன் 6ம் தேதி திறக்கப்பட இருந்தது. ஆனால் கோடை வெயில் சுட்டெரித்ததால் விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் கோடை விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பெரும்பாலானோர், இந்த வார இறுதியில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏற்ப ஞாயிற்றுக்கிழமை அன்று 700 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை அன்றும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணித்தால், தேவையை அறிந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+