எல்பிஜி தட்டுப்பாடு! சென்னையில் தனியார் கல்லூரிக்கு விடுமுறை! ஹாஸ்டலை காலி செய்ய சொன்ன நிர்வாகம்
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆன்லைனில் பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயலில் இயங்கி வருகிறது டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம்! இந்த கல்லூரியில் ஏராளமானோர் மருத்துவம், பொறியியல் படிப்புகளை படித்து வருகிறார்கள். இதன் உரிமையாளர் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்.

இவருக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. அது போல் அவரது சொந்த ஊரான ஆரணியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியனவும் இயங்கி வருகின்றன.
கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வணிக சிலிண்டர் கிடைக்காததால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. அது போல் பல்வேறு வெரைட்டி உணவு உற்பத்தியும் நிறுத்தியுள்ளன.
அது போல் டீ, காபி கடையில் போண்டா, வடை, பஜ்ஜி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுவிட்டன. அது போல் டீ, காபி விலையும் அதிகரித்துள்ளது. இந்த சிலிண்டர் தட்டுப்பாடு கல்லூரி விடுதிகளிலும் எதிரொலித்துள்ளன.
சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அங்குள்ள கேன்டீன்கள் இயங்க முடியவில்லை. இதனால் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி வரை கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைனில் வகுப்பெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகளிலும் சிலிண்டர் இல்லாமல் உணவு தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஹாஸ்டல் மாணவர்களை காலி செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அது போல் சில கல்லூரிகளில் வெரைட்டியான உணவு வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹாஸ்டலிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு இளைத்து போன மாணவர்களுக்கு இது பேரிடியாக உள்ளது. சரி கேன்டீனில் சாப்பிடலாம் என்றால் அங்கும் நிறைய உணவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
அது போல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என நிலவி வரும் வதந்தியால் மக்கள் இரவு முழுக்க பெட்ரோல் நிலையங்களில் காத்திருந்து டேங்கை ஃபுல் செய்து வருகிறார்கள். கேஸ் சிலிண்டர் கேட்டும் ஏஜென்சிகளை நெருக்குகிறார்கள். ஹோட்டல் உரிமையாளர்களும் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று வணிக சிலிண்டர் கேட்டு வாக்குவாதம் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications