அடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் தற்போது இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. இது இன்று நள்ளிரவு மன்னார் வளைகுடாவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் வளைகுடாவில் புரேவி நிலைக் கொள்ளவுள்ளதால் நாளை தென் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புரேவி புயல் இலங்கை கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில்,
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரம் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாம்பன் கடற்பகுதி அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் எதிரொலியால் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்கிறது. வேளச்சேரி, பட்டினப்பாக்கம், தரமணி, மந்தைவெளி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications