இந்தியா வருகை தந்த 15 இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
டெல்லி: இந்தியா வருகை தந்த இத்தாலி சுற்றுலா பயணிகளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உயிர் பலி உலக நாடுகளையும் தாக்கியுள்ளது. சீனாவில் புதிதாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,270 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சீனாவில் கொரோனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,981 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது.
செளதியில் இருந்து பெங்களூரு வந்த பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்துக்கு சரக்கு கப்பலில் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிந்தது. கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சலால் அவதிப்பட்ட அவர் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து மத்திய பிரதேசம் திரும்பிய 32 வயது ராணுவ அதிகாரி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் இந்தூர் அருகே உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த 21 பேரில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதனை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கொரோனா தாக்குதலால் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு உலக வங்கி 12பில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு இந்த நிதி உதவியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications