விவசாயிகளுக்கு பெரிய சான்ஸ்.. இதுதான் கடைசி தேதி.. மிஸ் பண்ணாதீங்க.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது... இது குறித்து தமிழக அரசு அறிக்கையை வெளியிட்டு, அலர்ட் செய்திருக்கிறது.
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயிர்க்காப்பீடு: அந்தவகையில், இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற வேண்டுமானால், விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இருந்து வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் இந்தமுறை மழைப்பொழிவு மிகவும் குறைவாக உள்ளது.. மேலம், காவிரியிலிருந்து தண்ணீரும் திறந்துவிடப்படவில்லை என்பதால், காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.. குறுவை பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், அதுவும் போதுமானதாக இருக்கவில்லை.
சம்பா சாகுபடி: இதனால், குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், ஹெக்டெர் ஒன்றுக்கு 13,000 ரூபாய் இழப்பீடு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பா சாகுபடிக்கான பணிகள் மும்முரமாகி உள்ளன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. அதில், வேளாண் துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெல் ரகங்கள்: அந்த அறிக்கையில், "டெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு மழை பொழிவு பெறப்படின், குறுகிய கால நெற்பயிர் இரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற இரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால், குறுகியகாலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.
தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும் பிங்க் பிக்மெண்ட்டட் ஃபேக்கல்டிேவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பயிர் காப்பீடு: நிலத்தடி நீரை (கிணறுகள். உறைக் கிணறுகள். ஆழ்துளை குழாய்கி கிணறுகள்) தேவைக்கேற்றவாறு. சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023 க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications