அய்யோ.. நந்தினி..ம்மா.. ஊசி போட்டு கொன்னுட்டாங்களே.. தலையிலடித்து கதறிய அம்மா.. சிறுமிக்கு என்னாச்சு
தவறான ஊசி செலுத்தப்பட்டதால் மாணவி இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்
சென்னை: வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி ரமேஷ் - வசந்தி.. இவர்களது ஒரே மகள் நந்தினி... அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் நந்தினி.
இவருக்கு சில தினங்களாகவே வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது.. அதனால், மண்ணடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நர்ஸ்கள்
நந்தினியை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு அல்சர் பிரச்சனை இருப்பதாக சொல்லி உள்ளனர்.. அத்துடன், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.. அதன்படி கடந்த செவ்வாய்கிழமை இரவு, நர்ஸ்கள் நந்தினிக்கு ஊசி ஒன்றை போட்டதாக கூறப்படுகிறது... அதன் பிறகு, நந்தினியின் உடல்நிலை மோசமாகிவிட்டது.. எனவே, உடனடியாக ஐசியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் நந்தினி..ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்யோ ஊசி
6 வருடங்களாக பிள்ளை இல்லாமல் இருந்து, தவமிருந்து பெற்ற ஒரே மகளை பறிகொடுத்துவிட்டோமே என்று சொல்லி, நந்தினியின் பெற்றோர் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.. பிறகு, மருத்துவமனையில் இருந்து பெற்றோர் ஒப்புதலின்றியே, நந்தினியின் உடலை போலீசார் போஸ்ட் மார்ட்டத்துக்கு கொண்டு செல்வதாக சொல்லி, அவரது பெற்றோர் அழுது கூச்சலிட்டனர்.. "அய்யோ ஊசி போட்டு கொன்னுட்டாங்களே" என்று தலையில் அடித்து கதறிய, நந்தினியின் அம்மாவால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது...

டிஸ்சார்ஜ்
எனினும், நந்தினி உயிரிழப்புக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்... போஸ்ட் மார்ட்டம் செய்தால்தான், சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்... நந்தினிக்கு சிகிச்சை நடந்தபோது இன்றைய தினம், அதாவது 2-ம்தேதி வீட்டுக்கு அழைத்து செல்லலாம், இப்போதைக்கு அவர் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் பெற்றோர்களிடம் நம்பிக்கை தெரிவித்து வந்துள்ளனர்.. திடீரென சிறுமி இறந்துவிட்டதாக சொல்லவும்தான், பெற்றோர்களால் நம்ப முடியாமல் போயுள்ளது.

தப்பு நடந்துருச்சே
நேற்று என் மகள் நல்லாதானே இருந்தாள்? எப்படி இது நடந்தது? என கேள்வி மேல் கேள்விகளை டாக்டர்களிடம் கேட்டுள்ளனர்.. ஆனால், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது... கடைசியாக செலுத்தப்பட்ட ஊசியில்தான் ஏதோ தவறு நடந்துள்ளது.. அது என்ன ஊசி என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நந்தினியின் குடும்பத்தினர் கத்தி கூச்சலிட்டனர்.. இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications