Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆத்தாடி, 155 ஆண்டுகள் நிற்காமல் சுற்றும் கடிகாரம்! சென்னை மணிக்கூண்டு மனிதர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமார் 385 ஆண்டுகள் பழமையான சென்னை மாநகரத்தின் அடையாளமாக இருந்து வரும் மணிக்கூண்டுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதை யார் தினமும் பராமரித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பழைய மெட்ராஸ் நகரத்தின் அடையாளமாகப் பல கட்டடங்கள் இன்றைக்கும் சென்னையில் உள்ளன. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். இவற்றை எல்லாம் தாண்டி இன்றைக்கும் நிலைத்து நிற்கும் மூன்று மணிக்கூண்டுகள் சென்னையில் உள்ளன. அந்தக் காலத்தில் மணி பார்ப்பதற்காக இந்தக் கூண்டுகளை அமைத்தார்கள் என்று நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. கடிகாரம் என்பது ஆடம்பரமான பொருள். விலை கொடுத்து அனைவராலும் வாங்க முடியாத வசதியான சாதனம். ஆனால், இன்று?

madras

சென்னையில் உள்ள ராயப்பேட்டை மணிக்கூண்டு மிகவும் பிரபலம். அதைவிட்டால் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ஒன்றும் ரிப்பன் பில்டிங்கில் ஒன்றும் உள்ளன. அடுத்து மிண்ட் மணிக்கூண்டு. வடசென்னை மத்திய சென்னை எனப் பகுதிக்கு ஒன்று என நிலைத்து நிற்கும் இந்த மணிக்கூண்டுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. அதைத் தினமும் இயக்குவதற்காக ஊழியர்கள் உள்ளனர். இவர்கள்தான் அந்தக் காலத்தின் கண்ணாடி.

ராயப்பேட்டை மணிக்கூண்டில் டைம் கீப்பராக வேலை பார்த்து வருபவர். இந்தக் கடிகாரம் 1949இல் மெட்ராஸ் கார்ப்பரேஷன் மூலம் அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஓட ஆரம்பித்த கடிகாரம் இது. 75 வருடங்களாக இந்தக் கடிகாரம் சுழன்றுகொண்டே இருக்கிறது. "என் வேலையை 4 மணிக்கு ஆரம்பித்துவிடுவேன். 9:30 முதல் 6 மணி வரை எனக்கு அலுவலகம். அதற்கு முன்பு 8:30 முதல் 9 வரை எனது கடையில் இருப்பேன்" என்கிறார் ஆண்டனி. இவர் பி. ஒஆர்ஆர் அண்ட் சன்ஸ் கம்பெனியில் வாட்ச் மெக்கானிக் ஆக பணியாற்றி வருகிறார். ஒரு காலத்தில் ஓல்டு மெட்ராசின் அடையாளமாக விளங்கிய கம்பெனி இது. ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டை இவர்கள்தான் நிர்வகித்து வருகின்றனர். "இந்தக் கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். காலம் மாறிவிட்டது இது ஏன்? என்பார்கள். அப்படி அல்ல. ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டுக்கு ஒரு உயிர் உள்ளது. அதை நான் உணர்ந்துள்ளேன்" என்கிறார்.

ரிப்பன் பில்டிங்கில் உள்ள மணிக்கூண்டில் சையத் ஃபெரோஸ்தான் டைம் கீப்பராக பணியாற்றி வருகிறார். இது உலகிலேயே 2வது கடிகாரம் என்கிறார். 1913இல் லார்டு ரிப்பன் இந்தியா வரும்போது இந்தக் கடிகாரத்தைச் சொந்த பயன்பாட்டிற்காகக் கொண்டு வந்துள்ளார். அவர் போன பிறகு இது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மணி அடித்தால் சிந்தாதிரிப்பேட்டை வரைக் கேட்கும் என்கிறார்.

madras

இவரேதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டையும் கவனித்து வருகிறார். இவரது தந்தை ஆற்காடு நவாப் அரசரின் வாட்சுகளை சரி செய்து கொடுக்கும் பணியிலிருந்துள்ளார். அவரை இந்த மணிக்கூண்டைக் கவனித்துக் கொள்ள வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவருக்குப் பின் இப்போது மகன் தொடர்கிறார். இவருக்குப் பின் இதைக் கவனிக்க ஆள் இல்லை என்கிறார்.

சென்னையைப் பொறுத்தவரை இந்த இரண்டு டைம் கீப்பர்கள்தான் உள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ராயப்பேட்டை மணிக்கூண்டுக்குச் சாவி கொடுப்பது ஒரு ஸ்டைல். வாரம் ஒரு முறை சாவி கொடுத்தால்போதும். மொத்தம் எட்டு நாட்கள் நிற்காமல் ஓடும். இதில் மணி அடிக்கும் சத்தம் வராது. ஆனால் ரிப்பன் பில்டிங்கில் உள்ள மணிக்கூண்டு கால் மணி நேரத்திற்கு 4 முறை மணி அடிக்கும் அரை மணி நேரத்திற்கு 8 முறை மணி அடிக்கும். அந்த சத்தமே ஒரு வித இசை போல உள்ளது. இந்த மணிக்கூண்டுக்குள் மிகப்பெரிய ஆலய மணிகள் நான்கு, ஐந்து உள்ளன. அது நேரத்திற்கு ஏற்ப ஓசையில் வித்தியாசம் காட்டுகின்றன.

ரிப்பன் பில்டிங் கடிகாரம் ஒரு ஸ்டைல் என்றால், சென்ட்ரல் ரயில் நிலையம் கடிகாரம் ஒரு ஸ்டைல். அதே போல மிண்ட் மணிக்கூண்டு ஒரு ஸ்டைல். இதைக் கனி அண்ட் சன்ஸ் நிறுவனம் தான் ஆரம்பக் காலத்தில் கவனித்து கொண்டது. இந்த நிறுவனம் தொடங்கியே 100 ஆண்டுகள் மேல் ஆகின்றன. மிண்ட் தங்கசாலையின் வடக்குப் பகுதியில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த மணிக்கூண்டு செயல்படவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு மீண்டு இதை மாநகராட்சி இயங்க வைத்தது. கடந்த 2 ஆண்டுகள் முன்பாக இதற்குப் புதிய வண்ணங்கள் அடிக்கப்பட்டு புதுப்பொலிவு தரப்பட்டது. இதை மறுபடியும் ஓடவைத்த பெருமை பி. ஒஆர்ஆர் அண்ட் சன்ஸ் நிறுவனத்தையே போய்ச் சேரும். இந்தக் கடிகாரம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் பலருக்கு நல்ல நேரம் காட்டத் தொடங்கியது.

சென்னையைப் பொறுத்தவரை முதலில் கட்டப்பட்ட மணிக்கூண்டு என்றால் அது டவுடனில் கட்டப்பட்டதுதான். 1900 தொடக்கத்தில் இதை ஆங்கிலேய அரசு கட்டியது. இதேபோன்று ஒரு மணிக்கூண்டு புளியந்தோப்பு மற்றும் பட்டாளம் சந்திப்பில் உள்ளது. அது 1948இல் கட்டப்பட்டது. பின்னர் 1965இல் இதில் பெல் அடிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. தண்டையார்பேட்டையிலும் ஒரு மணிக்கூண்டு உள்ளது. இது 1940இல் கட்டப்பட்டது.

இவை இல்லாமல் மெரினா கடற்கரை பகுதியில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மணிக்கூண்டு உள்ளது. அது இப்போதும் செயல்பட்டு வருகிறது. அதே வரிசையில் உள்ள மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியிலும் ஒரு மணிக்கூண்டு உள்ளது. இதை சர் தாமஸ் மன்றோ 1870இல் கட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+