160 = 80 + 80.. அமித்ஷாவே இறங்கிட்டாரா.. பாஜக யாருடன் கூட்டணி.. மேஜர் ரோலில் "நிர்மலா".. சபாஷ் தாமரை
வரும் எம்பி தேர்தலை முன்னிட்டு, பாஜக பல்வேறு வியூகங்களுடன் இப்போதே களமிறங்கி விட்டன
சென்னை: வரும் எம்பி தேர்தலை முன்னிட்டு, தேசிய கட்சிகள் இப்போதே களமிறங்கி விட்டன.. அதிலும் பாஜக படுஸ்பீடாக தேர்தல் வேலையை துவங்கிவிட்டதாக தெரிகிறது.. அதுகுறித்து தகவல்கள்தான் தேசிய அரசியலை சூடாக்கி வருகின்றன.
பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை எம்பி தேர்தலை கடந்த ஒரு வருட காலத்துக்கு முன்பேயே எதிர்நோக்க துவங்கிவிட்டது.. சில மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் அமித்ஷா பேசிய பேச்சின் சாராம்சத்தை இன்னமும் தேசிய தலைவர்கள் மறக்கவில்லை..
வடமாநில அரசியலையும் தாண்டி, தென்மாநிலங்களில் பாஜகவின் பார்வை வீசப்பட்டது அமித்ஷாவின் பேச்சில் அப்போதே வெளிப்பட்டது.

தகிக்கும் களம்
அமித்ஷா பேசும்போது, "சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவுகட்டும். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார். அதேபோல, இந்த எம்பி தேர்தலை மனதில் வைத்துதான், பல மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து வருவதுடன், பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். அத்துடன், நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரமாண்ட பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார் பிரதமர்... இது பாஜக தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தையும், தெம்பையும் தந்து வருவதாக தெரிகிறது...

வித்தியாச பாஜக
எப்போதுமே பாஜகவின் அரசியல் வித்தியாசமானது.. அனைவரும் தேர்தலுக்கு முன்பு அரசியல் செய்தால், பாஜக மட்டும், தேர்தலுக்கு பிந்தைய அரசியலை கையில் எடுக்கும்.. அதில் வெற்றி பெற்று, மாநிலங்களில் கூட்டணி அரசுக்கும் அது வழிவகுக்கும்.. அதுபோலவே, இந்த முறை புது வியூகம் ஒன்றை பாஜக கையில் எடுத்துள்ளதாம்.. வழக்கமாக, அரசியல் கட்சிகள், தாங்கள் செல்வாக்கு பெற்றிருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அந்த தொகுதிகளை எக்காரணம் கொண்டும் தங்கள் கையை விட்டு நழுவாமல் கவனித்து கொள்ளும். ஆனால், பாஜக அப்படி இல்லை..

நழுவிய இடம்
கடந்த தேர்தலில் கை நழுவி சென்ற தொகுதிகள் எவை என்பதை லிஸ்ட் எடுத்துள்ளது.. அதன்படி மொத்தம் 160 தொகுதிகள் லிஸ்ட் எடுத்து, அந்த தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம்.. கையை விட்டு போன இந்த தொகுதிகளை எப்படியாவது, கைப்பற்றிட வேண்டும் என்பதால், தேவையான திட்டங்களையும் தற்போது வகுத்து வருகிறார்களாம்.. இதில் முதல் விஷயமாக, 80 தொகுதிகளை அமித்ஷாவும், 80 தொகுதிகளை நட்டாவும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளார்கள். ஆளுக்கு ஒருபக்கம் தங்கள் பணிகளை முடுக்கிவிட்டும் வருகின்றனர்..

தாமரை மலருமா
அதேபோல, அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர்கள் சுனில் பன்சல், வினோத் தாவ்தே, தருண்சுக் ஆகிய 3 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த தொகுதிகளை அதிகபட்சமாக 5 தொகுதிகள் கொண்ட தொகுப்புகளாக பிரித்துள்ளார்களாம்.. இந்த ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரை அழைத்து வந்து, பிரமாண்ட பேரணிகள், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாக்கள் நடத்த முடிவு செய்துள்ளன. அந்தவகையில், மொத்தம் 45 முதல் 55 பிரமாண்ட பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது..

160+
இதுதவிர இந்த 160 தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முன்பாக, மத்திய அமைச்சர்களும், கட்சியின் சீனியர்களும் அடிக்கடி சென்று வந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்று அம்மக்களை நேரில் சந்தித்து, தொகுதிகளின் கள நிலவரத்தை நேரில் பார்த்து வெற்றிக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அசைன்மென்ட்கள் தரப்பட்டுள்ளதாம்.. இதற்காகவே இந்த தொகுதிகளின் பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.. ஆனால், தேர்தல் நேரத்தில் இந்த 160 தொகுதிகளுக்கான பிரச்சாரங்கள், செலவுகள் மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதிகளில் சற்று கூடுதலாகவே இருக்கும் என்கிறார்கள்..

45 ஸ்பெஷல் டீம்
அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்யவும், தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தவும், 45 குழுக்கள் ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டு உள்ளதாம்.. இதில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளாம்.. கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாக பேசி தொகுதி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு அமித்ஷாவுக்கு தரப்பட்டுள்ளது.. எனவே, கருத்துக் கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம். அனைத்து தொகுதிகளிலும் திட்டமிட்டு தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் மேலிட பாஜகவில் இருந்து 160 தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்..!!!
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications