Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. 7 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் மதுரை காவல் ஆணையர், மண்டல ஐஜிக்கள் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 7 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் எஸ் கே பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் விவரம்

17 IPS officers transferred in Tamil Nadu and 7 IGs promoted to ADGP

அரசு அதிகாரிகள் இடமாற்றம் அவர்கள் முன்பு வகித்த பதவியும் வருமாறு:

1. அயல் பணியில் சிபிஐயில் பணியாற்றிய ஐஜி அஸ்ரா கார்க் தமிழகம் திரும்பிய நிலையில் தென் மண்டல ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தென் மண்டல ஐஜி ஆக பதவி வகிக்கும் டி.எஸ். அன்பு இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல் சட்டம் ஒழுங்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சென்னை சட்டம் ஒழுங்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. மதுரை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா இடமாற்றம் செய்யப்பட்டு வடக்கு மண்டல ஐஜி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் துரைகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

17 IPS officers transferred in Tamil Nadu and 7 IGs promoted to ADGP

7. சென்னை காவலர் நலன் ஐஜி மல்லிகா இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது முன்பு டிஐஜி அளவிலான பதவியாக இருந்தது ஐஜி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
8. சென்னை காவலர் நலன் ஏஐஜி சம்பத்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை காவலர் நலன் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். (இவர் ஐபிஎல் ஊழல் சர்ச்சையில் சிக்கி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது)
9. அயல் பணியில் இருந்து தமிழகம் திரும்பிய ஐஜி பால நாகதேவி சென்னை செயலாக்க பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ஜெயராம் சென்னை ஆயுதப்படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. அயல்பணியில், புதுதில்லியில் தலைமையிட எல்லையோர காவல் படை பிரிவு ஐஜி-ஆக பணியாற்றும் ஆயுஷ்மான் திவாரி ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.
12. அயல்பணியில் ஜார்கண்டில் சிஆர்பிஎஃப் ஐஜி-ஆக பதவி வகிக்கும் மகேஷ்வர் தயாள் ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.
13. அயல் பணியில் டெல்லியில் இந்தோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவு ஐஜியாக பணியாற்றும் சுமித் சரண் ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.
14. சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி அபின் தினேஷ் மோடக் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.
15. சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சஞ்சய் குமார் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடருகிறார். இந்தப் பொறுப்பு ஐஜி பதவியிலிருந்து ஏடிஜிபி பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
16. சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி-ஆக பதவி வகிக்கும் செந்தாமரைக்கண்ணன் ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார். இந்த பொறுப்பு ஐஜி அந்தஸ்திலிருந்து வந்ததிலிருந்து ஏடிஜிபி அந்தஸ்திற்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
17. ஊர் காவல் படை ஐஜியாக பதவி வகிக்கும் வனிதா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை ரயில்வே கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட உத்தரவை உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+