Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வராத நிலையிலேயே அதற்குள்ளாகவே அரசியல் சூடு பிடித்து வருகிறது.. ஒரு புறம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி, மறுபுறம் எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி என இரு பெரிய அணிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளன.. ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட கணக்கு ஒன்றாக இருந்து வரும் நிலையில், 2 கட்சிகளின் தற்போதைய கணக்கு வேறு விதமாக அமைந்து வருகிறது.. என்ன நடக்கிறது?

ஆட்சியை மீண்டும் தக்க வைக்க திமுகவும், விட்ட ஆட்சியை இந்த முறையாவது பிடித்து விட வேண்டும் என்று அதிமுகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன.. அதனால்தான், இரு திராவிட கட்சிகளுமே அதிக தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே முனைப்பை காட்டி வருகின்றன..

DMK Alliance

175 சீட் மாஸ்டர் பீஸ்

ஆனால், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறிய கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பிரதானக் கட்சிகளே தாங்கள் போட்டியிட நினைத்த தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டிய சிக்கலான நிலை உருவாகியுள்ளதாக தெரிகிறது..

திமுகவை பொறுத்தவரை இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதி பங்கீடு என்பது மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது..

திமுக, அதிமுக கியர்

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேரடியாக களம் கண்ட திமுக, இந்த முறை கூடுதல் கூட்டணி விரிவாக்கம் மற்றும் புதிய அரசியல் இணைப்புகள் குறித்து நடக்கும் பேச்சுகள் காரணமாக தனது எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன..

குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என பேசப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் இடங்களை கோரி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.. இதனால் குறைந்தது 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கணக்கிட்டிருந்த திமுக தலைமைக்கு, இப்போதைய சூழல் 160 இடங்களுக்குள் போட்டியிட வேண்டிய நிலை உருவாகி உள்ளதாம்.

மறுபுறம் அதிமுக முகாமிலும் இதேபோன்ற அரசியல் இழுபறி நீடித்து வருகிறது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற இடங்களை சுட்டிக்காட்டி, பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கிறதாம்..

அதேபோல் வட மாவட்டங்களில் தனது வாக்கு செல்வாக்கை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சி சுமார் 20 தொகுதிகள் வரை கோரி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..

லட்டு சான்ஸ்

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளும் கூட்டணியில் தங்களுக்கு உரிய பங்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.. இதனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன் கட்சி போட்டியிட திட்டமிட்டிருந்த சில கோட்டை தொகுதிகளிலேயே இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது..

தொடக்கத்தில் இரு திராவிடக் கட்சிகளும் 170 முதல் 180 தொகுதிகளில் தங்கள் சின்னத்தை களமிறக்க வேண்டும் என்ற பெரிய திட்டத்துடன் இருந்தன.. ஆனால் கூட்டணி அரசியல், சிறிய கட்சிகளின் அழுத்தம் மற்றும் தேசியக் கட்சிகளின் எதிர்பார்ப்பு ஆகியவை அந்தத் திட்டத்தை மாற்ற தொடங்கியுள்ளன..

திராவிட கட்சிகள்

நாளை பிரதமர் மோடி திருச்சி வருகையை முன்னிட்டு அரசியல் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பேச்சும் பரவி வருகிறது.. ஆனால் இறுதியில் பார்க்கும்போது, இந்தத் தேர்தலில் பெரிய கட்சிகள் தங்களின் இடங்களை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய புதிய அரசியல் சமநிலையை தமிழக அரசியல் களம் உருவாக்கி வருவது மறுக்க முடியாத உண்மையாகவே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+