ஷர்மிளாவின் சில்மிஷம்.. டியூஷன் அக்கப்போர்.. ஒரு உயிரே போயிடுச்சே.. டீச்சர் இப்ப "மாமியார்" வீட்டில்

அம்பத்தூர் மாணவன் தற்கொலை தொடர்பாக மேலும் சில விவரங்கள் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டியூஷனுக்கு போன இடத்தில், காதலில் விழுந்து, தற்கொலையிலும் விழுந்து இறந்த மாணவன் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

4 நாட்களுக்கு முன்புதான், சேலத்தில் ஒரு இளம்பெண் கைதானார்.. அதுவும் போக்சோவில் கைதானார்.. 17 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.

இந்த பெண்ணுக்கு 20 வயதாகிறது.. கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகூறி, அந்த சிறுவனை இழுத்து கொண்டு ஓடியுள்ளார்.. வீட்டை விட்டு ஓடிப்போன இவர்கள் 2 பேரும், கிருஷ்ணகிரியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

 கர்ப்பமாமே

கர்ப்பமாமே

ஸ்கூலுக்கு போன பிள்ளையை காணோம் என்று சிறுவனின் பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட, அதற்கு பிறகு போலீசார் இந்த விஷயத்தில் களமிறங்கி இவர்களை தேடி கண்டுபிடித்தனர்.. இப்போது சிறுவனை மீட்டுவிட்டாலும், அந்த பெண்ணை போக்சோவில் கைது செய்துள்ளனர்.. இதில் கொடுமை என்னவென்றால், அந்த பெண் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்.. இந்த பரபரப்பு முடிவதற்குள்ளேயே இன்னொரு துயரம் நம் மாநிலத்தின் தலைநகரில் நடந்துவிட்டது..

 டியூஷன் டீச்சர்

டியூஷன் டீச்சர்

சென்னை அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் ஷர்மிளா... 24 வயதாகிறது.. ஸ்கூல் முடிந்ததுமே சாயங்கால நேரத்தில் தன்னுடைய வீட்டில் மாணவர்களுக்கு ஷர்மிளா டியூஷன் எடுத்து வந்துள்ளார்.. இந்த டியூஷனில் கள்ளிக்குப்பத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஷர்மிளாவிடம் டியூஷன் படித்து வந்திருக்கிறார்.. ஆனால், அந்த மாணவனுக்கு பாடம் நடத்தாமல், ஷர்மிளா அவனிடம் நெருக்கம் காட்டியுள்ளார்.

 சில்மிஷம் + ஷர்மிளா

சில்மிஷம் + ஷர்மிளா

மற்ற மாணவர்களை விட, இந்த மாணவன் மீது மட்டும் ஸ்பெஷல் அக்கறை இருந்துவந்துள்ளது.. அந்த பையன் டியூஷன் முடிந்து வீட்டுக்கு போனாலும், போனை போட்டு பேசுவாராம் ஷர்மிளா.. இதனால் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானது. டியூஷன் நேரத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம், சிறுவனிடம் சில்மிஷத்திலும் ஷர்மிளா ஈடுபட்டுள்ளார். இதை போட்டோவும் எடுத்து வைத்து கொண்டுள்ளார்.. மிட்நைட் வரை சிறுவனுடன் சேட்டிங் செய்வாராம்.. இந்த நிலையில் அந்த மாணவன் 12ம் வகுப்பு முடிந்துவிட்டு காலேஜ் சேர தயாராகி வந்துள்ளார்.

 ஆபாச மெசேஜ்

ஆபாச மெசேஜ்

இதனால், இவர்களது உறவு விரிசல் விட தொடங்கியது. இதனிடையே ஷர்மிளாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயார்த்தமும் முடிந்துள்ளது.. எனவே, அந்த சிறுவனுடனான காதலை ஷர்மிளா டக்கென நிறுத்திக்கொண்டார்... அத்துடன், அந்த சிறுவனை அழைத்து, எனக்கு கல்யாணமாக போகிறது.. இனிமேல் நாம் பிரிந்துவிடலாம், எனக்கு போன் செய்யாதே, மெசேஜ் அனுப்பாதே என்றெல்லாம் கூறியுள்ளார்... இதை கேட்டு மாணவனுக்கு அதிர்ச்சி அதிகமாகிவிட்டது.. அதனால், ஷர்மிளாவை நேரில் சந்தித்து பேச முவு செய்து, ஷர்மிளாவையும் வரவழைத்துள்ளார்..

 பெட்ரூமில் தொங்கிய சிறுவன்

பெட்ரூமில் தொங்கிய சிறுவன்

நேரில் பேசியபோதும், ஷர்மிளா தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது தெரிந்து, சிறுவனுக்கு தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது.. எனினும், சிறுவனுக்கு அட்வைஸ் தந்துவிட்டு ஷர்மிளா அங்கிருந்து கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.. ஆனால், சிறுவனுக்கோ ஷர்மிளாவை பிரிய மனமில்லை.. ஷர்மிளா இப்படி சொன்னதில் இருந்தே மன விரக்தியுடன் இருந்துள்ளார்.. வீட்டில் யாரிடமும் பேசவில்லையாம்.. ஒருகட்டத்துக்கு மேல், வேதனையை அடக்க முடியாமல், அன்றைய தினம் இரவே, தன்னுடைய பெட்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

 அந்தரங்க ஆடியோ

அந்தரங்க ஆடியோ

இதற்கு பிறகுதான் தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டுபோஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... விசாரணையையும் துவங்கினர்.. முதல்வேலையாக, சிறுவனின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது.. அந்த செல்போனில், ஷர்மிளாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஏராளமாய் சிதறி கிடந்தன.. மேலும், இவர்கள் 2பேரின் அந்தரங்க ஆடியோக்களும் இருந்தன..

 லீக் ஆடியோ

லீக் ஆடியோ

அப்போதுதான் ஷர்மிளா என்ற கேரக்டரே போலீசாருக்கும், குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஷர்மிளாவிடம் விசாரித்தனர்.. அப்போது சிறுவனை காதலித்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஷர்மிளாவை கைது செய்தனர்.. அதுவும் போக்சோவில்.. நாளுக்கு நாள் இளம்பெண்களே இப்படி போக்சோவில் கைதாகி கொண்டிருப்பது, பெருத்த அதிர்ச்சியையும், கவலையையும் தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. நிச்சயதார்த்தம் முடிந்த ஷர்மிளா இப்போது நிஜமாகவே "மாமியார்" வீட்டுக்கு சென்றுவிட்டார்...!!

நெருக்கம்

நெருக்கம்

இதில் இன்னொரு தகவலும் தெரியவந்துள்ளது.. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தன்னுடைய நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கவுன்சிலிங் சென்றுவிட்டு வந்தாராம் மாணவர்.. அன்றைய தினமே தற்கொலைக்கும் முயன்றுள்ளதாக தெரிகிறது.. இவர் படித்த அதே பள்ளியில் டெம்பரவரி ஆசியையாக ஷர்மிளா வேலை பார்த்து வந்துள்ளார்.. 10ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று ஷர்மிளாவின் டியூஷனில் மாணவன் சேர்ந்துள்ளான்.. 3 வருடமாக இதே டியூஷனில்தான் தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்... 3 வருடமாகவே காதலிப்பதாக மாணவனிடம் சொல்லி நெருங்கி உள்ளார் ஷர்மிளா..

மாமியார் வீடு

மாமியார் வீடு

காதல் என்ற வார்த்தையை சொல்லி ஏமாற்றவும்தான், மாணவனால், அதை ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள். மாணவன் தற்கொலை தொடர்பாக அவரது தாயார் போலீசில் புகார் தந்து, மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று கதறி அழுதுள்ளார். போலீசார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தற்கொலை கடிதம் எதுவும் மாணவன் எழுதி வைக்கவில்லை என்பதையறிந்து, அதற்கு பிறகுதான் செல்போனை ஆய்வு செய்துள்ளனர்.. அளவுக்கு அதிகமான மனஅழுத்தம்தான், தற்கொலைக்கு தூண்டி விட்டுள்ள நிலையில், குழந்தையை தற்கொலையை தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்ட வழக்குகளும் ஷர்மிளா மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+