தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை.. மூச்சுத் திணறி மரணம்.. சென்னையில் கொடுமை
சென்னை: தாயின் மார்பில் பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த தம்பதி சத்யராஜ் - செலஸ்டின் தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். முதல் குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. இரண்டாவது குழந்தை பிறந்து 18 நாள்தான் ஆகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் தனது குழந்தைக்கு பாலூட்டினார். பிறகு தூங்க வைக்கலாம் என்று செலஸ்டின் தூக்கியபோது, குழந்தை மயங்கி சரிந்தபடியே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள்.
ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்னவே இறந்து விட்டதாக கூறினர். தாயிடம் பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத்திணறல்தான் குழந்தை இறந்ததற்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[அக்யூபேஜியாவால் பாதிக்கப்பட்ட பெண்.. தாலியையும் விட்டு வைக்கல.. மருத்துவர்கள் அதிர்ச்சி]
சில சமயங்களில் குழந்தைகள் தாயிடம் பால் குடிக்கும்போது புரையேறி விடுவதும் உண்டு. அப்போது குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே இந்த குழந்தைக்கும் பால் புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறந்து 18 நாளே ஆன குழந்தை இப்படி அநியாயமாக உயிரிழந்தது நினைத்து காசிமேடு மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications