சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்பார்த்த தீர்ப்பு.. அரசியலில் தெளிவு கிடைத்துள்ளது.. ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி தமிழிசை கருத்து!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    18 MLA disqualification case verdict: It is expected says Tamilisai Soundararajan

    சபாநாயகரின் தீர்ப்பு சரிதான் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஒரு தெளிவு கிடைத்துள்ளது. ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கொடுத்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சரி என்று கூறியுள்ளார்.

    இது எதிர்பார்த்த தீர்ப்புதான். சபாநாயகருக்கு எம்எல்ஏக்களை நீக்க அதிகாரம் உள்ளது. இனி குற்றாலம் செல்வது, கூர்க் செல்வது, கூவத்தூர் செல்வது போன்ற நாடகம் நடக்காது.

    பல விஷயங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பு வந்துள்ளது. மேல்முறையீடு செய்தால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே. மேல்முறையீடு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும்.

    English summary
    18 MLA disqualification case verdict: It is expected says Tamilnadu BJP chief Tamilisai Soundararajan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X