தமிழகத்தில் ஒரேநாளில் 1,843 பேருக்கு கொரோனா- முதல் முறையாக 24 மணிநேரத்தில் 44 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை மட்டும் 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடையே தெரிவித்தார். தமிழகத்தில் திங்களன்று கொரோனா பாதிப்பு விவரம்:

46 ஆயிரம் பாதிப்பு- 479 மரணங்கள்
24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1843. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையானது 46,504 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் ஆண்கள் 1,132; பெண்கள் 710; மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 44 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1257 பேருக்கு பாதிப்பு
மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று 1257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்கள் விவரம்: அரியலூர்-1; செங்கல்பட்டு 120; கோவை- 3; கடலூர்- 27; திண்டுக்கல்- 2; கள்ளக்குறிச்சி-11; காஞ்சிபுரம்- 39; கன்னியாகுமரி 5; கரூர்-1; கிருஷ்ணகிரி 2; மதுரை- 33; நாகை- 8; நீலகிரி-3; புதுக்கோட்டை- 8; ராணிப்பேட்டை- 34; சேலம்- 3; சிவகங்கை-9; தென்காசி-6; தஞ்சாவூர்-12; தேனி- 9; திருப்பத்தூர்- 1; திருவள்ளூர்-50; திருவண்ணாமலை- 32; திருவாரூர் -10; தூத்துக்குடி 34; நெல்லை- 17; திருப்பூர்-2; திருச்சி-8; வேலூர்- 20; விழுப்புரம்- 13; விருதுநகர் 9 என மொத்தம் 1789 பேருக்கு கொரோனா

பயணிகள் 54 பேருக்கு பாதிப்பு
பிற நாடுகள், மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இன்றைய பரிசோதனையில் மொத்தம் 54 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையும் சேர்த்து தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை- செங்கை நிலவரம்
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,244. சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3005 ஆகவும் செங்கல்பட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications