எல்லாமே மாறுது.. அந்த "சூரிய அஸ்தமனம்"..தேர்தல் விதிமீறல் புகாருக்கு "1905" எண்.. தனி கன்ட்ரோல் ரூம்
சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலில் எந்தவிதமான முறைகேடுகளும், விதிமீறல்களும் ஏற்படக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளது.. அந்தவகையில், யாராவது விதிமீறலில் ஈடுபட்டால், புகார் தெரிவிப்பதற்காகவே, பிரத்யேகமான எண்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியிலுள்ள மோடி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.. அதனால், புதிய அரசை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

எம்பி தேர்தலை நடத்துவதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை சமீபகாலமாகவே மேற்கொண்டு வந்த நிலையில், மற்றொருபக்கம், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. முக்கியமாக, ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் கள நிலவரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தெல்லாம் தீவிரமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் தேதி: இறுதியில் தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்துவிதமான பணிகளும், முன்னேற்பாடுகளும் முடிந்தநிலையில், தேர்தல் தேதியை அறிவிப்பது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.. எனவே, எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றார்கள்.. பிறகு இன்றைய தினம் அறிவிப்பு வரக்கூடும் என்பதால், ஒட்டுமொத்த நாடும் மிகுந்த ஆர்வத்தில் காத்திருந்தது.
திருவிழா: இந்நிலையில், தேர்தலுக்கான தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.,. அப்போது, அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் சொல்லும்போது, தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.. இந்த தேர்தல் திருவிழாவில் நீங்கள் அனைவருமே எங்களுடன் சேர்ந்து பங்கேற்க வேண்டும்.
மொத்தம் இந்த முறை 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.. அதனால், அவர்களுக்கு வசதியாக 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்படும்...
குற்றப்பின்னணி: 1.50 கோடி தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளார்கள். 1.82 கோடி வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க போகிறார்கள்.. குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்றெல்லாம் தேர்தல் ஆணையர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து ராஜீவ்குமார் சொல்லும்போது, தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் சொல்வதற்காகவே, பிரத்யேகமான போன் நம்பர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பண பலம், ஆள் பலம், விதிமீறல் போன்றவைகள் எல்லாம் தேர்தல் ஆணையம் முன் உள்ள சவால்களாக உள்ள நிலையில், 1905 என்ற எண்ணில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம் என்று ராஜீவ்குமார் அறிவித்திருக்கிறார்.
கட்டுப்பாட்டு அறைகள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் ராஜீவ்குமார் அறிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகறிது.
காரணம், வழக்கமாக சூரியன் மறைந்தபிறகு, பணத்தை கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை ஒவ்வொரு தேர்தலின்போதும் அறிவிக்கப்படும். அதுபோலவே இப்போதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிரடி: எனினும், பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றில் விதிமீறல்கள், மாலை 6 மணிக்கு மேல் அதிகமாகவே நடக்க வாய்ப்பிருக்கிறது.. அதனால்தான், புகார் சொல்வதற்காகவே, இந்த பிரத்யேக போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.. கட்டுப்பாட்டு அறைக்கு மக்கள் தெரிவிக்கும் புகார்கள், உடனுக்குடன் பறக்கும் என்று தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, கட்டுப்பாட்டு அறையும், இந்த புகார் எண்ணும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications