தாம்பரம் கட்டிடத்தில் 1970 சதுர அடி அப்பட்டமான விதிமீறல்... மாநகராட்சிக்கு நெட்டிசன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1970 சதுர அடி இடம் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டு சாலை மற்றும் கால்வாய்கள் தடுப்பு சுவர்கள் மூலம் அப்பட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி 9 மாதங்கள் கடந்தும் தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனடியாக சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

1970 sqft excess FSI against sanctioned plan in Tambaram corporation: no action has taken on building nor violators

சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட சென்னையின் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு வாங்கிய அனுமதியைவிட கூடுதலாக சில அடி தூரம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுவது சர்வ சாதாரணமாக உள்ளது. அதேபோல் சிலர் பாதைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது, சிமெண்ட் தளம் அமைப்பது, வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது என சர்வ சாதாரணமாக ஆக்கிரமித்து வைத்திருப்பார்கள். சாலைகளில் பல இடங்களில் அப்பட்டமாக விதிமீறல்கள் இருக்கும். ஆனால் இவை எல்லாம் இன்றோ நேற்றோ நடந்ததாக இல்லாமல் பல ஆண்டுகளாக நடந்தவைகளாக இருக்கும்.

இந்த சூழலில் 2015 வெள்ளத்திற்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிதாக இனி யாரையும் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் குரல்கள் எழுந்தன. அரசும் உயர்நீதிமன்றமும், 2015 வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

ஆக்கிரப்புகளை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள்அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன. பல ஆக்கிரமிப்பு நிலங்கள் அதிரடியாக மீட்கப்பட்டன. மேலும் 2015 வெள்ளத்திற்கு காரணமாக இருந்த முக்கியமான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எந்த தயவுதட்சணையும் இன்றி இடித்து தள்ளப்பட்டன. 2015 முதலே ஆக்கிரமிப்புகள் விவகாரத்தில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 26வது வார்டான குரோம்பேட்டை வேலாயுதம் தெருவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1970 சதுர அடி இடம் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதுடன், தடுப்பு சுவர்கள் மூலம் சாலை மற்றும் கால்வாய்கள் அப்பட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனோகர் என்பவர் ட்விட்டரில் தாம்பரம் மாநகராட்சியை டேக் செய்து புகார் அளித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டே மாநகராட்சி சார்பில் கட்டிடத்தை பயன்படுத்த வேண்டாம் என்று பூட்டி சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்னும் பணிகள் தொடர்வது எப்படி என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 9 மாதங்களாக விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தாம்பரத்தில் இதுபோன்று ஆக்கிமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+