தமிழகத்தில் 3-வது நாளாக 2,000-த்தை தாண்டியது- ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா - 41 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக ஒரே நாளில் 2,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

54,449 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று 27.537 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,115 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெள்ளியன்று மட்டும் கொரோனாவால் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

1630 பேர் இன்று டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1630 பேர் இன்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,271 ஆக உள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது.

சென்னையில் மட்டும் 1322
மாவட்டங்களில் சென்னையில்தான் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகம். சென்னையில் இன்று மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது மொத்தம் 38,327 ஆக அதிகரித்திருக்கிறது. செங்கல்பட்டில் இன்று 95 பேருக்கு கொரோனா உறுதியானது.

திருவள்ளூரில் 85
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 85 பேருக்கு கொரோனா உறுதியானது. கடலூரில் 5; தருமபுரி-2; ஈரோடு-1; கள்ளக்குறிச்சி- 7; காஞ்சிபுரம்-39 என கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
