"புது ரேஷன் கார்டுகள் ரெடி".. 2.8 லட்சம் குடும்பங்களுக்கு ஜாக்பாட்.. ராதாகிருஷ்ணன் கூறிய குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஸ் குட்நியூஸ் சொல்லி உள்ளார். அதாவது புதிதாக விண்ணப்பம் செய்ய 2.8 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் பிரிண்ட்டிங் நிலையில் உள்ளது என்றும், இந்த ரேஷன் கார்டுகள் இன்னும் 30 நாளில் மாவட்ட வாரியாக விண்ணப்பம் செய்தவர்களின் கைகளுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகள் வேண்டி ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையாகும். ஏனென்றால் திட்டம் 2023 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை தகுதி உடைய குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து 2 அறிவிப்பு.. 2ம் தங்கம் மாதிரி.. ரேஷன் கார்டு வச்சு இருக்கவங்க.. இதை நோட் பண்ணுங்க
இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டு குடும்பமாக இருப்போரில் பலரும் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்தனர். இதனால் வழக்கத்து மாறாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளால் ரேஷன் கார்டு வழங்கும் பணி தள்ளிப்போனது.
எல்லாம் ஓவர்.. தமிழக அரசு வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்பு.. ரேஷன் கடைக்கு போறவங்க.. இதை நோட் பண்ணுங்க
கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி நடத்தை விதிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு விரைவுப்படுத்தியது. அதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. தற்போது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில் 2.8 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதன்மூலம் அடுத்த 15 முதல் 30 நாட்களில் தமிழகத்தில் புதிதாகவிண்ணப்பம் செய்த 2.8 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று மாநில உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தான் யுனிவர்செல் பிடிஎஸ் என்று சொல்லி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் இல்லாத ஒரு கோடி பேருக்கு ரேஷன் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக 2.8 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி என்பது தேர்தல் காரணமாக வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இந்த 2.8 லட்சம் ரேஷன் கார்டுகளின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு படிப்படியாக அடுத்த 30 நாட்களுக்குள் வழங்கப்பட உள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த கார்டுகள் வைத்திருக்கும்போது புதிதாக லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் தான் 2.8 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணி பிரிண்டிங் நிலையில் உள்ளது. அடுத்த 15 அல்லது 30 நாட்களுக்குள் மாவட்ட வாரியாக ரேஷன் கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்’’ என்றார். இதன்மூலம் அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் புதிதாக 2.8 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு கிடைப்பது உறுதியாகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications