மயிலாப்பூர் ஆடிட்டர் கொலை வழக்கு.. உட்கார வைத்து புதைத்தது ஏன்?.. கொலையாளிகள் வாக்குமூலம்
சென்னை: மயிலாப்பூர் ஆடிட்டர் கொலை வழக்கில் இரு கொலையாளிகளும் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளனர்.
மயிலாப்பூரில் உள்ள பிருந்தாவன் நகரில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ஆடிட்டராக இருந்தார். இவரது மனைவி அனுராதா. இவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகளின் பிரசவத்திற்காக சென்றிருந்தார்.
அங்கு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த ஆடிட்டர் தம்பதி கடந்த 7ஆம் தேதி அதிகாலை சென்னை திரும்பியுள்ளனர்.

மயிலாப்பூர் வீடு
அப்போது மயிலாப்பூர் வீட்டிற்கு இவர்களது கார் டிரைவர் கிருஷ்ணா அழைத்து சென்றார். இந்த நிலையில்தான் தந்தையும் தாயும் வீட்டிற்கு போய் சென்றார்களா என தெரிந்து கொள்ள அவர்களது மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். அப்போது அவர்கள் இருவரும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மகள், சென்னையில் உள்ள தனது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பண்ணை வீட்டில் புதைப்பு
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போதுதான் தம்பதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மயிலாப்பூர் வீட்டில் கொலை செய்யப்பட்ட தம்பதியை டிரைவர் கிருஷ்ணாவும் அவரது நண்பர் ரவி ராயும் நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் புதைத்தனர்.

பணத்திற்காக கொலை
தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு நேபாளத்துக்கு தப்பி செல்ல முயன்ற போது அவர்களை ஆந்திராவில் போலீஸார் மடக்கி பிடித்தார்கள். இதையடுத்து அவர்கள் இருவரையும் நேற்றைய தினம் பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்
இந்த நிலையில் போலீஸிடம் கிருஷ்ணாவும் ரவி ராயும் கூறிய வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்தையும் அனுராதாவையும் புதைத்துவிட்டால் போலீஸுக்கு தெரியாது என நினைத்தோம். கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே பண்ணை வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டோம். படுக்க வைத்து புதைத்தால் மேடாக தெரியும் என்பதால் இருவரையும் உட்கார வைத்து புதைத்தோம் என வாக்குமூலத்தில் கூறியுள்ளார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications