தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.. 8,37,317 மாணவர்கள் பங்கேற்பு.. மாஸ்க் அணிய அட்வைஸ்
தமிழகத்தில் இன்று நடக்கிறது பிளஸ் 2 மாணவர்கள், மாணவிகளுக்கான பொதுத்தேர்வு
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ம் தேதி வரை நடைபெற உள்ளது.. இதற்காக மாணவர்களுக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து சொல்லி உள்ளனர்.
Recommended Video

கடந்த 2 வருட காலமாகவே, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. பிள்ளைகளுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், பொதுதேர்வையும் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வி துறை தீவிரமான கவனத்தை செலுத்தியது.

நெறிமுறைகள்
அந்த வகையில், இன்று பிளஸ் 2 தேர்வுகள் மாநிலம் முழுவதும் நடக்க உள்ளன.. இன்று தொடங்கி வரும் 28 ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.. இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர், தேர்வுகளை எழுதுகின்றனர்... இதற்காக மொத்தம் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.. இன்றைய தேர்வினை முன்னிட்டு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

இடைவெளி
அதில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடை பிடிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.. குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம் வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆள்மாறாட்டம்
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு எழுத நிரந்தர தடைவிதிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இதனிடையே, பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அந்த வாழ்த்துச் செய்தியில், பிளஸ் டூ பொதுத்தேர்வை மாணவ மாணவிகள் நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications