ரிசல்ட் வந்ததும்.. தமிழ்நாடு அரசியலை ஆட்டிப்படைக்க போகும் 2 சம்பவங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லை
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் ஜூன் 4ம் தேதி டெஹ்ரதல் முடிவுகள் வெளியானதும் இரண்டு முக்கியமான அரசியல் ரீதியான மாற்றங்கள் நடக்கும் சென்று தமிழ்நாடு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிற்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. தேசிய அளவில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்ட தேர்தல் கடந்த வாரமே முடிந்துவிட்டது.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமா தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
லோக்சபா தேர்தல் ஓவர்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தல் முடிந்ததும் இரண்டு முக்கியமான அரசியல் நடவடிக்கைகள் தமிழ்நாத்தில் நடக்கும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் விஷயம் அதிமுகவில் பெரிய அளவில் கட்சி ரீதியான மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,. தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதாவது கட்சி நிர்வாகிகள் பெரிதாக தான் சொன்னதை கேட்கவில்லை. திட்டமிட்ட படி பணிகள் சரியாக நடக்கவில்லை என்று புகார்கள் வைத்தார்.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்கு பின்பாக சசிகலா எழுச்சி இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி வரிசையாக 7 தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார். கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், 1 உள்ளாட்சி, 1 மாநகராட்சி தேர்தல், 2 இடைத்தேர்தல்களில் எடப்பாடி தலைமையில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது.
இனி 8வதாக ஒரு தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் அது எடப்பாடிக்கு பெரிய பிரஷராக மாறும். அது எடப்பாடியின் தோல்வியாக மாறும். இதனால் அதிமுக உள்ளே சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் ஒரு குழு உருவாக்கும் என்று விவாதங்கள் வைக்கப்படுகின்றன. சசிகலாவின் எழுச்சியாக இது இருக்கும் என்று ஒரு விவாதம் எழுந்துள்ளது.
இரண்டாவது புயல்: இது போக பிரபல கட்சியில் இருக்கும் நிர்வாகி ஒருவர் வேறு கட்சிக்கு மாறலாம் என்றும் கூறப்படுகிறது. தனது மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி பிற மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு வேறு கட்சிக்கு செல்லும் திட்டத்தில் உள்ளாராம். தனக்கு எதிராக கட்சி தலைமை செயல்பட்ட காரணத்தால் கட்சியை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
முக்கியமான பொறுப்பில் உள்ள அவர் கட்சியை உடைத்துக்கொண்டு செல்லும் முடிவில் உள்ளாராம். இதனால் சில கசப்பான விஷயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் கூட.. மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று இவர் கட்சியை விட்டு செல்லும்.. அல்லது கட்சியை மொத்தமாக உடைக்கும் முடிவிற்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.
மேல்மட்ட நிர்வாகிகளோ அவர் செல்வது ஓகே.. ஆனால் கட்சியை எல்லாம் உடைக்க முடியாது. பல நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கு மேல் ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications