Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிக்ஸர்".. பிரதமர் வேட்பாளர் "அவரே"தான்.. தேசிய அளவில் ஸ்டாலினை வைத்து மெகா மூவ்.. திகைக்கும் பாஜக

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் முன்வருவாரா தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெகா பிளான் ஒன்றை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.. தமிழக முதல்வர் ஸ்டாலினை வைத்து, இந்த பிளானை சக்சஸ் செய்து காட்டவும் தீவிரத்தில் இறங்கி உள்ளார்களாம்.

விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அந்தவகையில், சமீபகாலமாகவே ராகுல் காந்தியின் அரசியல் உற்றுநோக்கப்பட்டு வருகிறது..

இதற்கு முக்கிய காரணம், அவர் மேற்கொண்ட யாத்திரைதான்.. இந்திய வரலாற்றை பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது யாத்திரைகள்தான்..

 தண்டி யாத்திரை

தண்டி யாத்திரை

காந்தியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது இந்த நாடு.. அவ்வளவு ஏன், நம் தமிழகத்தில்கூட, இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்து சென்றுள்ளன.. இதன்மூலம் மக்களுடன் நேரடியாக நெருங்கி சந்திப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அதிர்வுகள் அதிகம்.. அந்தவகையில்தான், ராகுல் பாதயாத்திரையை கையில் எடுத்தார்.. அதைவிட முக்கியம், அந்த யாத்திரையை ராகுல், தமிழகத்தில் இருந்து துவக்கியதுதான் மேலிட பாஜகவின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

 சீமானே சீமானே

சீமானே சீமானே

ராகுலின் இந்த யாத்திரையை, பாஜக முதல்நாளே கிண்டலடித்தது.. ஒன்றேகால் மணிநேரம் நடைப்பயிற்சி செய்வது போல உள்ளது என்று சீமானும் இதை கிண்டலடித்தார்.. ஆனாலும், இந்தியா முழுவதும் ராகுலின் இந்த நடைபயணம்தான், இந்த வருடம் அவரது அரசியலை தூக்கி நிறுத்தி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போயுள்ளது என்றே சொல்லலாம். கடந்த செப்டம்பரில் 7ம்தேதி, ராகுலின் நாடு தழுவிய இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் துவக்கினார், தமிழக முதல்வர் ஸ்டாலின்..

அமர்க்களம்

அமர்க்களம்

அதற்கு பிறகு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக, யாத்திரை இப்போது பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றிருக்கிறது.. இதுவரை, 3,300 கி.மீ.க்கு மேல் நடைபயணத்தை ராகுல் மேற்கொண்டுள்ளார்... வருகிற 30ம் தேதி, காஷ்மீரில் இந்த நடைபயணம் நிறைவு பெறுகிறது. இதன் நிறைவு விழாவில், ராகுல் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்... இந்த விழாவில் பங்கேற்குமாறு, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 PLAN 1

PLAN 1

ஆனால், ஆம் ஆத்மி, ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லையாம். இப்போது விஷயம் என்னவென்றால், இந்த நிறைவு விழாவில், ஸ்டாலின்தான் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக தெரிகிறது... காரணம், காங்கிரஸை தவிர்த்துவிட்டு திமுகவால் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உள்ளது.. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வரும்நிலையில், காங்கிரஸின் ஒத்துழைப்பு இல்லாமல் அது நடக்காது என்பதையும் திமுக மேலிடம் நன்கே அறிந்து வைத்துள்ளது.

 PLAN 2

PLAN 2

இந்நிலையில் யாத்திரையின் நிறைவு விழாவில், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை, முதல்வர் ஸ்டாலின் வாயிலாக முன்மொழிய வைக்க, காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருகிறதாம்.. காஷ்மீரில் ராகுலை பிரதமராக முன்மொழிந்தால், தேசிய அளவில் கன்னியாகுமரி வரை அதிர்வலைகளை அது ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறதாம்.. இதற்காகவே, மேலிட தலைவர்கள் சிலர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பிரதமர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட வைக்கும் வகையில் பேச்சு நடத்த போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன..

 கதர் லீடர்கள்

கதர் லீடர்கள்

"ராகுல் நடைபயணம் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளது" என்று ஏற்கனவே ஸ்டாலின் பாராட்டுப்பத்திரம் வழங்கியிருந்த நிலையில், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கதர் தலைவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இப்போதை சூழலில், இவ்வாறு அறிவிப்பதை முதல்வர் ஸ்டாலின் தவிர்ப்பார் என்கிறார்கள்.. காரணம், காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேண்டும் என்பதற்காகவே, ஆளுநர் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதால், ராகுல் விவகாரத்தை தற்சமயத்துக்கு தள்ளிவைக்க முதல்வர் தரப்பு நினைக்கிறாம்..

 தூண்டில் வலை

தூண்டில் வலை

அதுமட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்பதை ஏற்கனவே ஸ்டாலின் வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.. எனவே, காஷ்மீருக்கு நேரடியாக போகவில்லையானாலும், கூட்டணி தர்மத்தை மதித்து, தனக்கு பதிலாக, துணை பொதுச் செயலர் கனிமொழியை, முதல்வர் அனுப்பி வைக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆக, எப்படி பார்த்தாலும், பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் அளவுக்கு தேசிய அளவில் திமுக முக்கியத்துவத்தை பெற்று வருவதை, மற்ற கட்சிகளும் உற்றுகவனித்து வருகிறார்கள்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+