திமுக கூட்டணிக்கு வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தருவதாக வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார். இதேபோல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் பிரமாண்ட கூட்ட்டணி களம் காண்கிறது. இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தம் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 3 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

முஸ்லிம் கட்சிகளுக்கு குறைவான இடங்கள் தரப்பட்டதாக அதிருப்தி நிலவியது. இடதுசாரிகள், மதிமுக, விசிக என அனைத்து திமுக கூட்டணி கட்சிகளுக்கும் இதே பாணியில்தான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சி, தொகுதிகள் பெறாமலேயே திமுக அணிக்கு ஆதரவை தெரிவித்தது.
இதேபோல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அதிருப்தி அணியை சேர்ந்த வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது திமுக கூட்டணிக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.
மேலும் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர், சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்; நாங்கள் முன்வைத்த 20 அம்ச கோரிக்கைகளை வெற்றி பெற்றதும் நிறைவேற்றுவதாக ஸடாலின் உறுதி அளித்துள்ளார் என கூறினார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications