ஹாயாக மீன் வாங்க போன காயத்ரி.. புருஷனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு.. பானுவும் உடந்தை!
கணவனை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற மனைவி உட்பட 2 பேர் கைதாகி உள்ளனர்
Recommended Video
சென்னை: புருஷனை துப்பட்டாவால் இறுக்கியும், தலைகாணியால் முகத்தை அமுக்கியும் கொலை செய்துவிட்டு, மீன் வாங்க மார்க்கெட் போய் விட்டார் காயத்ரி! சென்னையில்தான் இந்த கள்ளக்காதல் கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது!
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். 28 வயசாகிறது. ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அதாவது நாகராஜின், காது, மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாகி கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் பறந்த நிலையில், உடனடி விசாரணை ஆரம்பமானது.

காயத்ரி
நாகராஜ் உடலை கைப்பற்றியை கோயம்பேடு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் நாகராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர், முதல் விசாரணையே நாகராஜ் மனைவி காயத்ரியிடம்தான். "என் புருஷன் தற்கொலை செய்துக்கிட்டார்" என்று போலீசாரிடம் அழுது ஒப்பாரி வைத்தார் காயத்ரி.

கள்ளக்காதல்
போலீசாரோ, தங்கள் பாணியில் விசாரணை நடத்திய பிறகுதான், காயத்ரி எல்லா உண்மையையும் சொல்ல ஆரம்பித்தார். "எனக்கும், என் புருஷனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது என் புருஷனுக்கு தெரிஞ்சு போயிடுச்சு. அதனால எங்களுக்குள்ள வீட்டில் தகராறு இருந்து வந்தது.

புருஷன்
அப்போது கோபத்தில் மகேந்திரனை தீர்த்துகட்டுவதாக சொன்னார். இந்த விஷயம், மகேந்திரனின் மனைவி பானுக்கு தெரிந்துவிட்டது. அதனால் நானும், பானுவும், சேர்ந்து என் புருஷனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை தலைகாணியால் முகத்தை அமுக்கினோம். என் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். நாகராஜ் எங்கள் கண்முன்னே இறந்துவிட்டார்.

மீன் மார்க்கெட்
இதுக்கப்புறம், நான் எதுவுமே தெரியாதது போல் மீன் வாங்க வானகரம் மீன் மார்கெட் சென்றதாக நாடகமாடினேன்" என்றார். இதையடுத்து, காயத்திரியையும்,பானுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி, மற்றும் கள்ளக்காதலனின் மனைவி சேர்ந்து ஒருவரை கொலை செய்த சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications