“தக் லைப்” பிடிஆர்.. இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த மதுரைக்காரர்! நிதியமைச்சராக மாஸ் சம்பவங்கள்
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதித்துறை இலாக்கா மாற்றப்பட்டு, அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவர் செய்த சம்பவங்களை அலசுவோம்.
2021 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியமைத்தவுடன் பலரும் எதிர்பார்த்ததைபோல் நிதித்துறை அமைச்சராக பதவியேற்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
இப்படி பலரும் அவர் நிதியமைச்சராக வேண்டும் என எதிர்பார்க்க காரணம், அதற்கு முன் மத்திய மாநில அரசுகள் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன், பிடிஆர் செய்தியாளர்களை அழைத்து அந்த நிதிநிலை அறிக்கைகளில் உள்ள குறைகள் பொருளாதார ரீதியாக அக்குவேறாக ஆணிவேறாக விமர்சித்து பேசியதுதான்.
மற்றொரு காரணம் அவரது கல்வியும், செய்த பணிகளும். திருச்சி என்.ஐ.டியில் பி.டெக், அமெரிக்கா பஃபலோ பல்கலையில் எம்.எஸ். பிஎச்டி, பிரிட்டனில் உள்ள எம்.ஐ.டி. ஸ்லோனில் எம்பிஏ என கற்ற அவர், உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான அமெரிக்காவின் ஹெல்மன் பிரதர் ஹோல்டிங்கில் பணிக்கு சேர்ந்தார்.

அதன் பின்னர் சிங்கப்பூரில் பிரபல ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியில் பணிக்கு சேர்ந்த அவர், அந்த வங்கியின் மேலாண் இயக்குநர் பதவிக்கு உயர்ந்தார். உலகின் மிகப்பெரிய வங்கிகளில் உயர் பதவிகளை அலங்கரித்த அவர், தமிழ்நாடு நிதியமைச்சராக பதவியேற்ற பின் பல தரமான சம்பவங்களை செய்தார்.
இவர் நிதியமைச்சராக பதவியேற்ற உடனே, முதலில் செய்த பெரிய சம்பவம் முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி சிக்கல்கள், தமிழ்நாட்டின் நிதி நெருக்கடி, கடன் போன்றவற்றை மக்கள் முன் சமர்பிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தததுதான். எனவே மாநிலத்தின் வருவாயை அதிகரித்து கடனை குறைப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டார்.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்டே தமிழ்நாடு சட்டசபை வரலாற்றிலேயே முதல் காகிதம் இல்லா பட்ஜெட்டாகும். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு அவரது பட்ஜெட் உதாரணமாக அமைந்தது.
மக்கள் என்ன நினைப்பார்கள்? செய்தியாளர்களின் கேள்விகள் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை என்று நிதிநிலை குறித்தும் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள நிதி சிக்கல்கள் குறித்தும் வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அவர் பேசியபோது விமர்சித்தவர்களே, பின்னர் அதுதான் சரியான முடிவு என்று தெரிவிக்கும் வகையில் செயல்பட்டார்.

குறிப்பாக நிதிநிலை காரணமாக பெட்ரோல், டீசல் விலையை இப்போது குறைக்க முடியாது என்றும், மகளிருக்கான உரிமைத் தொகையை உடனே செயல்படுத்த இயலாது எனவும் அவர் வெளிப்படையாகவே பேசினார். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததாகவும், மாநில அரசும் வாட் வரியை குறைக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில், "எங்களை விட மோசமாக செயல்பட்டு வருவோரிடம் இருந்து எங்களுக்கு அறிவுரை தேவையில்லை." என பதிலடி கொடுத்தார் பிடிஆர்.
ஒரே ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாகுறை 60 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 40 ஆயிரம் கோடியாக குறைந்து இருப்பதாக பிடிஆர் தெரிவித்தார். இந்தியாவின் பணவீக்கம் 8% ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பண வீக்கம் 5% என்று புள்ளிவிபரங்களுடன் பதிலடி கொடுத்தார். "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என எங்களை விட மோசமாக செயல்படுவோர் எங்களுக்கு உத்தரவு போட தேவையில்லை.
பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு மூன்று மடங்கும், டீசல் மீதான கலால் வரியை 10 மடங்கும் உயர்த்தியபோது மாநிலங்களுடன் ஆலோசிக்கவில்லை. எங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கையும் குறைத்துவிட்டனர். மத்திய அரசு 8 ஆண்டுகளாக மோசமான வரிக் கொள்கையை வைத்திருந்தது. இப்போது எங்களை வில்லனாக சித்தரிக்கின்றனர். வெட்கம்கெட்ட இரட்டை வேடம் இது." என பிடிஆர் விமர்சித்தார்.
மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த விடாமல் பிடிஆர் நிறுத்தி வைத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது மாநிலத்தில் நிதிநிலை ஓரளவு சீராகி உள்ளதால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த அறிவிப்பையும் வெளியிட்டார் பிடிஆர். மதுரையில் பிடிஆர் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நாள் இரவே பாஜகவில் இருந்த மருத்துவர் சரவணன் பிடிஆரை சந்தித்து பேசிவிட்டு பாஜகவிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
பிடிஆரை நாடு முழுவதும் பிரபலமாக்கியது இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சியில் அவர் பேசிய பேச்சுதான். பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக பேசியது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிடிஆர், "நீங்கள் சொல்வதை எதன் அடிப்படையில் நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்? இதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்களா? நீங்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி முடித்துள்ளீர்களா? நோபல் பரிசைதான் வைத்திருக்கிறீர்களா? அல்லது அரசியலமைப்பின் அடிப்படையில் கேட்க வேண்டுமா?
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கடனை குறைத்து, வருமானத்தை உயர்த்தி, வேலைவாய்ப்பை பெருக்கி சிறப்பான சாதனைகள் ஏதேனும் செய்துள்ளீர்களா? எங்களை விட சிறந்தவர்கள் என்று சொல்ல உங்களிடம் ஏதாவது இருக்கா? இதில் எதுவும் உண்மை இல்லாதபோது நாங்கள் ஏன் நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
பிடிஆர் ஆவேசமாக ஆங்கிலத்தில் பேசிய இந்த வீடியோவை பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் ட்விட்டரில் பகிர்ந்து பிடிஆரை புகழ்ந்து தள்ளினர். தங்களை நோக்கி வரும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் தலைவர்களுக்கு மத்தியில் ட்விட்டரில் உடனுக்கும் பதிலடி கொடுத்து வருபவர் பிடிஆர்.

மற்றொரு ஆங்கில தொலைக்காட்சியில் பிடிஆர் பயன்படுத்திய RIFF - RAFF என்ற வார்த்தைகளை அரசியல் விமர்சகர் சுமந்த் ஸ்ரீ ராமன் ட்விட்டரில் விமர்சித்தார். உடனே பிடிஆர், அந்த வார்த்தைகளுக்கான அர்த்தத்தை ட்விட்டரில் பகிர்ந்து, "riff raff என்றால், விரும்பத்தகாத, கீழான என்றுதான் பொருள் வரும். ஆங்கில அர்த்தத்தில் இல் குறைபாடு உள்ளதா? வெறுப்பை சுமக்கும் மதவெறியர்கள், ரவுடிகள், குற்றவாளிகள், 360 டிகிரி ஆடு மூலம் திரட்டப்பட்ட கும்பல்களை "கீழானவர்கள், விரும்பத்தகாதவர்கள்" என அழைப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?" என கேள்வி எழுப்பினார்.
கடந்த மாதம் பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட, உடனே அது குறித்து ட்விட்டரில் விளக்கமளித்தார். அதில் பேசியது தான் இல்லை என்றும், வேண்டுமென்றால் அந்த ஆடியோவை ஆய்வுக்கு அனுப்புமாறும் அவர் விளக்கி இருந்தார்.
பிடிஆர் அமைச்சராக பதவியேற்றவுடன் பாஜகவினரையும், ஜக்கி வாசுதேவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். 2021 ஆம் ஆண்டு மே மாதம், கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று பேசிய ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவை, "ஜக்கி வாசுதேவ் ஒரு விளம்பர பிரியர். அவர் பணம் சம்பாதிக்க மற்றொரு வழியை தேடுகிறார். கடவுளை பிரதானமாக நினைக்கும் ஒருவர் சிவராத்திரி விழாவிற்கு ரூ.5 லட்சம், ரூ.50 ஆயிரம் ரூ.5000 விலையில் எப்படி டிக்கெட் விற்பனை செய்ய முடியும்?" என்று பேசியது பெரும் விவாதப் பொருளானது.
பிடிஆரின் இந்த கருத்தை விமர்சித்த பாஜக பிரமுகர் எச்.ராஜா, "பிடிஆர் வாயை முடாவிட்டால் அவரது பூர்வீகம் பற்றிய உண்மையை பேச நேரிடும்." என எச்சரித்தார். உடனே பிடிஆர் தனது பூர்வீக விபரத்துடன் "நான் 4 வம் தலைமுறை திராவிடன், தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆம் தலைமுறை அரசியல்வாதி" என்று கூறி தன்னுடைய தாத்தாவின் மரணத்துக்கு தந்தை பெரியார் எழுதிய உரையையும் பேஸ்புக்கில் பகிர்ந்தார். நிதியமைச்சராக இருந்த பிடிஆர் 2 ஆண்டுகளில் செய்த சம்பவங்களில் சிலவற்றை இதில் பார்த்திருக்கிறோம்.
-
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம்












Click it and Unblock the Notifications