20,000,000,000,000,000.. பூமியில் இத்தனை எறும்புகள் இருக்கிறதா? எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?
சென்னை: உலகம் முழுக்க எத்தனை எறும்புகள் இருக்கும் என்ற கணக்கெடுப்பை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு உள்ளனர். இதில் பல சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நொடியில் உலகின் மக்கள் தொகை என்று worldometer குறிப்பிடும் எண்ணிக்கை 7,976,953,749 இதை நீங்கள் செக் செய்ய செல்லும் போது மக்கள் தொகை இதைவிட அதிகம் ஆகி இருக்கலாம்.. அல்லது குறைத்து இருக்கலாம்.
தோராயமாக இந்த நொடியில் உலகில் 797 கோடி மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், எல்ஜிபிடிக்யூ + பிரிவினர் என்று இத்தனை கோடி பேர் ஆக்சிஜனை சுவாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பூச்சிகள்
மனிதர்களை விட பூமியில் பூச்சிகள்தான் அதிகம் என்று நாம் ஏற்கனவே படித்து இருப்போம். பூச்சிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் நாம் சிறு துரும்பு கூட கிடையாது என்று படித்து இருப்போம். பூச்சிகளில் நாம் அடிக்கடி பார்க்கும் உயிரினம் என்றால் அது எறும்புதான். உலகில் கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகளில் எறும்புகள் உள்ளன. மலை பிரதேசங்கள் தொடங்கி நீங்கள் இந்த செய்தியை படிக்கும் லேப்டாப் கீபோர்டில் கூட எறும்புகள் குடியிருக்க வாய்ப்பு உள்ளது. என்றாவது உலகில் எத்தனை எறும்புகள் இருக்கும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா?

கண்டுபிடிப்பு
அதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.. உலகத்தில் மொத்தம் 200 கோடி கோடி எறும்புகள் உள்ளதாம். அதாவது 2 என்று எழுதி அதோடு 16 ஜீரோ சேர்த்தால் வரும் எண்ணிக்கை. 20,000,000,000,000,000 எறும்புகள் உலகத்தில் இருப்பதாக கணக்கு எடுத்துள்ளனர். இதில் எறும்புகள் மட்டும் 12 மில்லியன் டன் கார்பனை வெளியிடுவதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க இருக்கும் அனைத்து பறவையினங்கள், உலகின் பாலூட்டிகள் அனைத்தையும் விட இதற்கு அதிக எடை இருப்பதாக கூறப்படுகிறது.

எறும்புகள்
எறும்புகளில் மட்டும் 15700 வகைகள் உள்ளன. இவை பெயர் வைக்கப்பட்ட வகைகள். பெயர் வைக்கப்படாத வகைகள் நிறைய உள்ளன. எறும்புகள் குழுவாக வாழ கூடியவை. முன்னாள் செல்லும் தலைமை எறும்பை பின்பற்றி, ஒன்றாக வாழ கூடிய காலனி மனோபாவம் கொண்டவை எறும்புகள். இந்த எறும்புகள் பற்றி மட்டுமே உலகம் முழுக்க பல லட்சம் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் உலகில் 20,000,000,000,000,000 எறும்புகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

எண்ணிக்கை
இதுவரை எறும்புகளை தோராயமாகவே கணக்கிட்டு உள்ளனர். ஆனால் இந்த முறை உலகை சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து 489 ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த ஆய்வுகளை ஒன்றாக ஒருங்கிணைத்து எறும்புகள் எத்தனை இருக்கும் என்று கண்டுபிடித்து உள்ளனர். 7 கண்டங்களிலும் இருக்கும் பெரும்பாலான காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள் மற்றும் நகரங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

தடங்கள்
எறும்புகள் விட்டு செல்லும் தடங்கள், அதன் கழிவு தடங்கள், உள்ளூர் அளவில் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே வைத்து இருக்கும் எண்ணிக்கைகள் அனைத்தையும் சேர்த்து இந்த எண்ணிக்கையை கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு முன் இருந்ததை விட 20 மடங்கு அதிக எறும்புகள் உலகில் இருப்பதாக இந்த கண்டுபிடிப்பில் தெரிய வந்துள்ளது. ஆனாலும் இந்த எண்ணிக்கை 80 சதவிகிதம் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சூப்பர்
எறும்புகள் வெளியிடும் கார்பன் அளவு அடிப்படையிலும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டு உள்ளது. உலகம் முழுக்கவே எறும்புகள் பரவி இருக்கின்றன. வேறு எந்த உயிரினமும் இப்படி உலகம் முழுக்க பரவி இருந்தது இல்லை என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications