"20 சீட் வேணும்.. 3வது பெரிய கட்சி தேமுதிக தான்”.. வெளிப்படையாக பேசிய விஜய பிரபாகரன்! தேர்தல் பரபர
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. திமுக, அதிமுக என இரு கூட்டணிகளிலும் சீட் பங்கீடு குறித்து பிரேமலதா பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களது சீட் எதிர்பார்ப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் விஜய பிரபாகரன்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற முடிவு விரைவில் எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் கிராமத்தில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழா நடந்தது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தேமுதிகவின் கூட்டணி எதிர்பார்ப்புகளைப் பற்றிப் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய பிரபாகரன், "தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு பிறகு பெண் தலைவர்கள் யாரும் இல்லை. தேமுதிக கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று பலர் அவதூறுகளை பேசினார்கள். ஆனால் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஜான்சி ராணி போல் தமிழகத்தில் தேமுதிக எழுச்சியுடன் இருப்பதை அண்மையில் நடந்த மாநாடு மூலம் மக்களுக்கும், அவதூறு பேசியவர்களுக்கும் எடுத்துரைத்துள்ளார்.
தேமுதிக யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். சில கட்சிகள் சில பெல்ட்டை தாண்டி இல்லை, ஆனால், தமிழ்நாடு முழுவதும் தேமுதிக உள்ளது. தமிழகத்தில் திமுகவும் அதிமுக கூட்டணியும் இன்று சரி சமமாக உள்ளது. அதற்கு இணையாக ஜாதி, மதம் இல்லாத மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கூட்டணி தான் ஜெயிக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 500 முதல் 3,000 வாக்குகள் இடையே 60 தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது. திமுக வெற்றி அடைந்தது.
தேமுதிகவிற்கு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 முதல் 15 ஆயிரம் வாக்குகள் உள்ளது. இன்றைக்கு 170 சீட்டில் நிற்க வேண்டும் என திமுகவும் அதிமுகவும் நினைக்கிறது. கொள்கை முடிவாக தெரிவிக்கின்றனர். தேமுதிகவிற்கும் அது போன்ற கொள்கைகள் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் தற்போது 9 - 10 எம்.எல்.ஏக்கள் இல்லை என்றாலும் மீதமுள்ள 20 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களை காக்க வேண்டும் அல்லவா?
அதனை திமுக, அதிமுக போன்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 170 இடங்களில் திமுக, அதிமுக நிற்க வேண்டும் என நினைப்பது போல, தேமுதிகவில் உள்ள 20 முன்னாள் எம்.எல்.ஏக்களின் எதிர்காலத்தை பார்க்க வேண்டும். உங்கள் கட்சியை மட்டும் பார்க்காதீர்கள். உங்களை ஆட்சியில் அமர்த்துவதற்குத்தான் அந்த 20 தொகுதிகளை நாங்கள் கேட்கிறோம். கூட்டணியில் இடங்களை கேட்பது எங்களது உரிமை, கூடுதல் சீட்கள் தருவது உங்களது கடமை, தேமுதிக முதலமைச்சர் ஆக கேட்கவில்லை, உங்களை முதலமைச்சராக்க நாங்கள் கேட்கிறோம்." எனப் பேசி உள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications