குண்டை தூக்கி போட்ட ஆய்வு.. 2 வருஷம் இல்லையாம்.. 20 ஆயிரம் வருஷத்துக்கு முன்பே.. கொரோனா அட்டாக்..!
20 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் முன்னோர்களை தாக்கி உள்ளதாம்
சென்னை: இந்த கொரோனா இருக்கே.. அது 20,000 வருஷங்களுக்கு முன்பே நம்முடைய முன்னோர்களை தாக்கியிருக்கிறதாம்.. இதை இப்போது அறிஞர்கள் ஒரு ஆய்வில் கண்டுபிடித்து சொல்லி உள்ளார்கள்.
இது எந்த மாதிரியான வைரஸ் என்றே தெரியாமல் 2 வருடங்களாகவே ஆய்வுகள் நடந்து வருகிறது.. இதன் அறிகுறிகள் இவைதான் என்று ஒருமுடிவுக்கும் வர முடியவில்லை..
இதற்கு மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.. இதற்கான முயற்சியில் லட்சக்கணக்கான விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆய்வு
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த தொற்று பற்றி இன்னொரு விஷயம் நமக்கு தெரியவந்துள்ளது.. அரிசோனா பல்கலைக் கழகத்தின் பரிணாம வளர்ச்சி உயிரியலாளர் டேவிட் எனார்டு தலைமையிலான குழுவானது, இந்த கொரோனா வைரஸ் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளது.. அந்த ஆய்வில் ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது.

சோதனை
கிழக்கு ஆசியா பகுதிகளில் கொரோனாவைரஸ் 20,000 வருஷத்துக்கு முன்பே பரவியதாம்.. நம்முடைய முன்னோர்களையும் தாக்கிவிட்டதாம்.. உடனே அழியாமல் நீண்ட காலத்துக்கு இந்த வைரஸ் தங்கியிருந்திருக்கிறது.. இதற்கான ஆதாரங்களும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.. இப்போது உயிருடன் இருக்கும் மக்களின் டிஎன்ஏ மீது, தன் அடையாளத்தை விட்டு செல்லும் அளவுக்கு அதன் பேரழிவு இருந்துள்ளது என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்..

ஆய்வாளர்கள்
அதாவது, கொரோனா வைரஸின் ஜீன்களை டெஸ்ட் செய்யாமல், செய்யாமல், மனிதர்களின் டிஎன்ஏ மீது அது ஏற்படுத்திய விளைவுகளை இந்த ஆய்வாளர்கள் டெஸ்ட் செய்துள்ளனர்.. இதற்காகவே உலகின் பல பகுதிகளில் உள்ள 2,500 பேரிடம் இருந்து பெறப்பட்ட மரபணுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன...

ஆராய்ச்சி
இந்த ஆய்வில்தான், 20,000 வருஷங்களுக்கு முன்பு இந்த வைரஸ் வந்தது என்றும், இன்றைய கிழக்கு ஆசியா பகுதியில் வாழும் நவீன மனிதர்களிடம், நம் முன்னோர்களுக்கு வந்த கொரோனா வைரஸின் அடையாளம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்... நாளுக்கு நாள் புதுபுது தகவல்கள் கொரோனாவைரஸ் பற்றி பூதாகரமாக வந்துகொண்டே இருப்பதால், தொடர் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications