"குலுங்குது" கமலாலயம்.. கொஞ்சம் இருங்க.. அந்த "கருத்து கந்தசாமி"க்கு இருக்குது ஒருநாள்.. சீறிய லீடர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக மற்றும் உதயநிதியை சரமாரியாக விமர்சித்துள்ளார்
சென்னை: "420 கட்சி என்று உதயநிதி பாஜகவை சொல்கிறாரே" என்று அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. இப்படி ஒரு கேள்வியை கேட்டதுமே, பட்டாசாய் பொரிந்து தள்ளிவிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. அத்துடன் திமுக மீது பாய்ந்து, லிஸ்ட் போட்டு சரமாரியாக விமர்சித்தும் விட்டார்.
அதிமுக - பாஜக இடையே தற்போதைய சூழல் சுமூகமாக இல்லை.. கட்சி தாவல்கள் நடந்து வருகின்றன. நடந்து முடிந்த இடைத்தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "அதிமுக - பாஜக கூட்டணி எம்பி தேர்தலின்போதும் தொடரும்" என்று திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், ஒருவார காலத்துக்குள்ளேயே மோதல் வெடித்துள்ளது.
அண்ணாமலை - எடப்பாடி இரு தரப்பிலும் நடந்து வருவது நாடகம் என்கிறார்கள் மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி போன்றோர்.. மற்றொருபுறம், இரு தரப்பு தலைவர்களுக்குள்ளும் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது என்கிறார்கள்.

படார் அணுகுண்டு
இப்படிப்படிப்பட்ட சூழலில்தான், கூட்டணிக்குள் விரிசலோ? உறவு முறிகிறதோ? என்றெல்லாம் யூகங்களும், சலசலப்புகளும் வெடித்து வருகின்றன.. .திடீரென தன் ஆதரவாளர்களை இழுக்கும் பணியை தொடங்கியதால், தானும் அதை செய்ய நேரிடும் என்று அண்ணாமலை நேற்று எச்சரித்திருந்த நிலையில், திமுகவுக்கும் எரிச்சலை கூட்டும்விதமாக ஒரு "அணுகுண்டை" வீசியுள்ளார்.. அந்தவகையில் தற்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசிய பேச்சு மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. பாஜகவை 420 கட்சி என்று அமைச்சர் உதயநிதி சொல்லி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டனர்..

ஃபார்முலா
அதற்கு அண்ணாமலை, "உதயநிதியை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... அவரது தகுதி என்ன? படிப்பு என்ன? அவர் எங்கு போய் என்ன கஷ்டப்பட்டார்? அவர் யாரிடம் போய் என்ன பேசினார்? மக்கள் அவரது திறமைக்கு ஓட்டு போட்டார்களா? சேப்பாக்கம் தொகுதி என்பது தொடர்ந்து திமுக வெற்றி பெறும் தொகுதி. யாரை நிறுத்தினாலும் அங்கே திமுக வெற்றி பெறும்.. அவர்களுக்கு சாதகமான தொகுதி அது.. இன்றைக்கு உதயநிதி 'நீட்' பற்றி பேசுகிறார். அவருக்கு நீட் ஃபார்முலாவை சரி செய்ய தெரியுமா? ஏதாவது கேட்டால், அண்ணா பல்கலைக்கழக செனட் மெம்பர் என்கிறார்.

வெப்சைட் அம்பலம்
தமிழகத்தில் ஒரு காலத்தில் வல்லுனர்கள் கருத்து சொல்லும் நிலை இருந்தது. ஆனால் இன்னைக்கு கருத்து கந்தசாமிகள்தான் இருக்கிறார்கள்.. கருத்து கந்தசாமிகளாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் பேசுகிறார்கள்.. பாஜகவை 420 கட்சி என்கிறாரே.. இதையே நான் திரும்ப பதில் சொன்னால் அது வேற மாதிரி ஆகிவிடும். ஆனால், அது அவ்ளோ நல்லா இருக்காது. முதலில் யார் 420 என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்... நான் சொன்ன மாதிரி ஏப்ரல் 14-ந்தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட் வெப்சைட்டில் வெளியிடப்படும்...

200000
வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் எனக்கு வரும்... நான் சொன்ன கணக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சொல்லி உள்ளேன்... அதேபோல, ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும், சொத்து எங்கெங்கெல்லாம் உள்ளது என்ற லிஸ்ட் விவரமாக வெளியிடப்படும். அதெல்லாம் பார்த்து நீங்களே ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள்... அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா இப்படி எல்லாமே அதில் தெரியவரும்... அதனால, ஏப்ரல் 14ம் தேதி, என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும்...

+420
இந்த சொத்து பட்டியல் முழுவதும் வெப்சைட்டில்தான் வெளியிடுவோம்., அதன் நகல், பென்டிரைவ் டிவில் டிவி, மீடியாக்கள் என அனைவருக்குமே வழங்கப்படும்.. அப்படியே, என்னுடைய 10 வருட வங்கி கணக்கு உள்பட நான் சொன்ன அனைத்துமே அதில் வரப்போகிறது பாருங்கள்.. அதை பார்த்ததற்கு பிறகு, 420 யார் என்று தெரியும். அன்றைக்கு வந்து நீங்க என்னை கேள்வி கேளுங்க.. 420 யார் என்று அப்போது பேசிக்கொள்ளலாம். சரியா?" என்று பொரிந்து தள்ளிவிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அசையும் அச்சாணி
திமுகவுக்கு எரிச்சலை இவ்வாறாக தமிழக பாஜக தந்தாலும், தமிழக பாஜகவுக்கான குடைச்சலை எடப்பாடி கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே சில நிர்வாகிகள் விலகிய நிலையில், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோரும் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.. இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளது, பாஜகவுக்கு அடுத்த ஷாக்காக பார்க்கப்பட்டு வருகிறது.. பாஜகவை உடைத்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு செயல்பட்டு வருவது, அக்கட்சிக்கு கலக்கத்தை தந்து வருகிறதாம்.. இதனால்தான், எடப்பாடிக்கு எதிராக செயல்படுவது குறித்து அண்ணாமலை, பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியதாக சொல்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications