2024 லோக்சபா தேர்தல்..அதிமுக தலைமையில் சந்திக்க திட்டம்..அமித்ஷா தலைமையில் முடிவான ஒப்பந்தம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். நம்முடைய எதிரியை வீழ்த்த நாம் ஈகோவை விட்டுக்கொடுத்து லோக்சபா தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அதிமுக தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதனால் எடப்பாடி சொன்னதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று கடந்த நவம்பர் மாதமே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

2024 Lok Sabha election: Plan to meet with ADMK leadership Final deal with Amit Shah

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நிர்மல்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர். அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளதால் பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் போட்டோக்களை எரித்தனர். அதே நேரத்தில் அண்ணாமலையின் போட்டோக்களை பாஜகவினர் எரித்தனர். மாறி மாறி அதிமுக, பாஜக தலைவர்கள் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி நீடிப்பதாகவே கூறி வந்தனர்.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை மிகப்பெரிய புயலை கிளப்பினார்.

தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார்.

அதிமுக பாஜக தலைவர்கள் இருவரும் மாறி மாறி பரஸ்பரம் தங்கள் தரப்பு கருத்துக்களை காரசாரமாகவே பதிவு செய்து வந்தனர். ஊடங்களில் இதுவே விவாதப்பொருளானது. இந்த சூழ்நிலையில்தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம் என்றார்.

தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். இதை வழி மொழிந்த எடப்பாடியும். பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக தலைமையுடன் மோதலில் இருந்தாலும் டெல்லி தலைமையுடன் நட்பாகவே இருந்து வருகிறார். அதிமுக பாஜக கூட்டணி பற்றி சமீபத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமியும் நாங்கள் பாஜகவுடனே கூட்டணியில் இருக்கிறோம். இதை அமித் ஷாவும் கூறிவிட்டார். பாஜகவில் தேசிய தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்று கூறினார்.

மாநில தலைவர்கள் முடிவு இங்கே செல்லாது. பாஜகவில் தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்தார். அவர்கள் கட்சி பாஸ் மேலே இருக்கிறார். அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். கீழ இருப்பார்கள் இங்கே மாறிக்கொண்டே இருப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலையோ, பாஸ் எல்லாம் இங்கு யாரும் இல்லை எல்லோருமே கட்சிக்கு சேவை செய்யும் சேவகர்கள்தான் என்று சொன்னார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சியை சேர்ந்த கே.பி. முனுசாமி, சிவி சண்முகம் ஆகியோருடன் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. அப்போது தொகுதி பங்கீடு பற்றியும் கூட்டணி கட்சியினர் போட்டிய உள்ள இடங்கள் குறித்தும் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் லோக்சபா தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக இருந்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற செயல்பட வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+