'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? விட்டுக்கொடுக்குமா காங்கிரஸ்? சூடு பிடிக்கும் களம்!
சென்னை: I.N.D.I.A (Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் -பரபரப்பும் நேற்று முதல் எகிறி வருவதால் 2024 நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தை தொடர்ந்து நேற்றும், நேற்று முன் தினமும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், முந்தைய கூட்டத்தைக் காட்டிலும் அதிக எழுச்சியையும், உற்சாகத்தையும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பார்க்க முடிந்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், லாலு பிரசாத், ஃபரூக் அப்துல்லா, நிதீஷ் குமார், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். முந்தையக் கூட்டத்தில் 16 கட்சிகளாக நடைபெற்ற கூட்டம் நேற்றும் நேற்று முன் தினமும் 26 கட்சிகளாக கூட்டம் நடைபெற்றது.
பாஜக ஆட்சியை மத்தியில் அகற்ற வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனையுடன் ஒன்றுகூடிய 26 எதிர்க்கட்சிகளும் அடுத்தடுத்து மஹாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளன. குறிப்பாக டெல்லியில் 'இந்தியா' கூட்டணிக்கென செயலகம் அமைக்கப்படவுள்ளன. எல்லாம் சரி விஷயத்திற்கு வருவோம், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
காங்கிரசுக்கு பிரதமர் பதவி முக்கியமல்ல என என்னதான் கார்கே கூறினாலும் அதை அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. குறிப்பாக ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அவருடன் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற லட்சக்கணக்கான தொண்டர்களும், கீழ்மட்ட நிர்வாகிகளும் கார்கேவின் கருத்தை ஏற்பார்களா என்பது சந்தேகற்குரிய விவகாரம் தான்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும், இதனிடையே காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இப்போது தான் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள மெதுவாக முன் வந்துள்ளது. இன்னுமும் பழைய பண்ணையார்தனம் செய்தால் இழப்பு கட்சிக்கே என்பதை உணர்ந்ததால் தான் ராகுலும், கார்கேவும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார்கள். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்த்தோம் என்றால், கூட்டணியில் விட்டுக்கொடுத்துப் போகும் மனநிலை இல்லாமல் இருந்ததேயாகும்.
அது போன்ற ஒரு நிலை எக்காரணம் கொண்டு பொதுத்தேர்தலில் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார் சோனியா. இதனால் தான் காங்கிரஸ் பிரதமர் பதவியை அடைய முடியாவிட்டாலும் கூட ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என விரும்புகிறார் சோனியா. அவரது மனவோட்டத்தை தான் கார்கே நேற்றைய தினம் பிரதிபலித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் பட்சத்தில் காங்கிரஸ் ஒத்துழைப்போடு நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, ஆகியோரில் ஒருவர் பிரதமராக வந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வருமாறும் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் அழைத்தாலும் அவர் அதனை பெரிதாக விரும்பவில்லை எனத் தெரிகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications