அப்படிப் போடு.. 2026ல் வெயிட் ஏற போகுது விஜய்க்கு! சிஎம் சேர் யாருக்கு? தவெக கையில் முடிவு? பின்னணி?
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. ஐஏஎன்எஸ் மற்றும் மேட்ரிஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் படி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே 6 முதல் 12 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு கூறுவது பல கட்சிகளையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஒருபுறம் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழு வேகத்தில் இறங்கியுள்ள நிலையில், மறுபுறம் பல்வேறு அமைப்புகள் தேர்தல் கருத்துக்கணிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன.
2026 தமிழக தேர்தல்
சமீபத்தில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு பேசுபொருளாக இருந்த நிலையில் தற்போது ஐஏஎன்எஸ் - மேட்ரிஸ் கருத்துக்கணிப்பும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் படி, தொகுதி எண்ணிக்கையைப் பொறுத்தவரை அதிமுக 114 முதல் 127 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக திமுக 104 முதல் 114 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IANS Matrize கருத்துக்கணிப்பு
இந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தமிழக வெற்றி கழகம் இருக்கும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றி கழகம் 6 முதல் 12 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடும் என்று கருத்துக்கணிப்பு குறிப்பிடுகிறது. மற்ற சிறிய கட்சிகள் இணைந்து 1 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி கணிப்புகளுடன் வாக்கு சதவீதத்தையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தவெக வாக்கு சதவீதம்
அதன்படி அதிமுக கூட்டணிக்கு 37 முதல் 38 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு 39 முதல் 40 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 14 முதல் 15 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் எனவும், மற்ற கட்சிகள் இணைந்து சுமார் 12 சதவீதம் வாக்குகளைப் பெறலாம் எனவும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
அதிமுக திமுக சீட் கணிப்பு
இந்த கணிப்பில் வாக்கு சதவீதத்தில் திமுக சிறிய அளவில் முன்னிலையில் இருந்தாலும், தொகுதி கணிப்பில் அதிமுக அதிக இடங்களை பெறும் என கூறப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பல அரசியல் ஆய்வாளர்கள் திமுக தற்போது வலுவாக உள்ளது என்று கூறி வரும் நிலையில் இந்த கணிப்பு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகம்
அதே நேரத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் தேர்தலிலேயே 14 சதவீதம் வரை வாக்குகளைப் பெறும் என கூறப்பட்டிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களுக்கு 40 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். முன்னதாக லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு 19 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
2026 சட்டசபை தேர்தல் கணிப்பு
ஆனால் தற்போதைய ஐஏஎன்எஸ் கருத்துக்கணிப்பில் அந்த சதவீதம் குறைவாகக் காணப்படுவது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் தேர்தல் நடைபெற இன்னும் கால அவகாசம் உள்ளதால், அரசியல் சூழ்நிலை மற்றும் கூட்டணி மாற்றங்கள் போன்றவை இந்த கணிப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே தற்போதைய கருத்துக்கணிப்புகள் ஆரம்ப நிலை மதிப்பீடாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்?












Click it and Unblock the Notifications