சென்னையில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் . செரோ சர்வே முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என செரோ சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது செரோ சோதனையில் பங்கேற்ற 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்கிறது செரோ சர்வே.

கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வு முறைகளில் Seroprevalence study முக்கியமான ஒன்று. உலக நாடுகள் பலவற்றிலும் இந்த செரோ ஆய்வு முறை பின்பற்றப்படுகிறது.

21.5% people exposed to coronavirus in Chennai: Sero survey

குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி அதில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிக்ஸ்- நோய் எதிர்ப்புத் திறன் உருவாகி உள்ளதா என்பதை ஆராய்வதுதான் Seroprevalence study. நமது நாட்டிலும் கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பதை உறுதி செய்ய ஏற்கனவே செரோ ஆய்வுகள் நடத்தப்பட்டன.

முதல் கட்ட செரோ ஆய்வில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை என்ற முடிவுக்கு வரப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக செரோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னையின் 51 வார்டுகளில் 15 மண்டலங்களில் 12,405 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இதில் 2,673 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. சோதனை நடத்தியதன் அடிப்படையில் மொத்தம் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதாவது 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இந்தியாவிலேயே டெல்லிதான் செரோ சர்வேக்களை அதிகம் நடத்தியிருக்கிறது. டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 7-ந் தேதி வரை செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 29.1% பேரின் ரத்த மாதிரிகளில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது. தற்போது டெல்லி மீண்டும் 17,000 பேரின் ரத்த மாதிரிகளை வைத்து செரோ சர்வே நடத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+