22 காரட் தங்கம்.. நகைக்கடன் விதியில் மாற்றம்? அவசரத்துக்கு பணம் வாங்க முடியாதே.. அரசுக்கு கோரிக்கை
சென்னை: தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதிய 9 விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு மேலும் சில சிரமங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் சங்கமும் இதே வேண்டுகோளை அரசுக்கு விடுத்துள்ளது.
தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதிய 9 விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதுடன், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்க ஆபரணங்கள்
புதிய விதிமுறையின்படி, தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும், அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்துடன், 1 கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி, அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும், கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும், அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிர்வலைகள்
இது பொதுமக்கள் தரப்பில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, தங்க நகைகளை அடகு வைக்க முடியாத சூழலில் லோன் ஆப்களை நம்பி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும், புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்க நகைகள் தூய்மை சான்றிதழுடன்தான் விற்பனை செய்யப்படுகிறது. அடகு வைக்கும்போதும் தூய்மைச் சான்றிதழ் அவசியம் தேவையற்றது... புதிய கட்டுப்பாடுகளால் நகை விற்பனை பெருமளவில் குறைய வாய்ப்பில்லை என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
ரிசர்வ் வங்கி
இதுதொடர்பாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ், கோவையில் செய்தியாளர்களிடம் சொல்லும்போது: "ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் 9 கட்டுப்பாடுகள் சிறு, குறு, தொழில் செய்பவர்கள், விசைத்தறி தொழில் செய்யும் தொழிலாளர்களை வெகுவாக பாதிக்கும்.
சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்களது தொழிலுக்கு, அவசர தேவைக்கு வங்கிக்கு சென்று தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்று அதனை சரி செய்து கொள்வார்கள். தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தநிலையில், 75 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவந்துள்ளதால், இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
22 காரட் தங்கம்
22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்ற விதிமுறையும் பழைய நகையை வைத்துள்ளோருக்கு பாதிப்பை தரும்..
ஒரு நபருக்கு ஒரு கிலோ தங்கம் மட்டுமே அடமானம் வைக்க முடியும், உரிமையாளர்கள் நாங்கள் தான் என்பதற்கு சான்று கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் அவசர தேவைக்காக அடகு வைத்து பணம் உதவி பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
வங்கிகளுக்குப் புதிய தலைவலி.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆடிப்போக வைக்கும் புள்ளி விவரம் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications