Gold Rate in Chennai: தங்கத்தின் விலை மூக்குத்தி சைஸுக்கு குறைவு.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் அதிகளவில் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வதும் குறைவதுமாக இருந்து வருகிறது. அதிகரிக்கும் போது லம்ப்பாகவும் குறையும் போது ஒன்று அல்லது இரண்டு இலக்கத்திலும் குறைகின்றன.

இதனால் பொதுமக்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறார்கள். இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.5070-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ 31 குறைந்துள்ளது.
அது போல் சவரன் ஒன்றுக்கு ரூ 40,560 க்கு விற்பனையாகிறது. அதாவது சவரனுக்கு ரூ 248 குறைந்துள்ளது. அது போல் 10 கிராம் தங்கத்தின் விலை 310 குறைந்து ரூ 50,700-க்கு விற்பனையாகிறது. 100 கிராம் தங்கத்தின் விலை ரூ 3100 குறைந்து ரூ 5,07,000 -க்கு விற்பனையாகிறது.
திமுகவின் மூளை... நிர்வாக ராஜதந்திரி... அபூர்வ அரசியல்வாதி... கட் அண்ட் ரைட் முரசொலி மாறன்..!
அது போல் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 34 குறைந்து கிராம் ஒன்று ரூ 5,532க்கு விற்பனையாகிறது. அது போல் சவரனுக்கு ரூ 272 குறைந்து ரூ 44,256 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை ரூ 340 குறைந்து 55,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 கிராம் தங்கத்தின் விலை ரூ 3400 குறைந்து ரூ 5,53,200க்கு விற்பனையாகிறது. கடந்த 12-ஆம் தேதி மட்டுமே 22 காரட் தங்கம் 3010 ரூ குறைந்தும் 24 காரட் தங்கத்தின் விலை ரூ 3350 குறைந்தும் விற்பனை செய்யப்பட்டது.