தொட்டதெல்லாம் வெற்றியா விஜய்க்கு? திமுக 50%, தவெக 23% ஓட்டு வங்கி! கணிப்பை தரைமட்டமாக்கிடுச்சே சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டால் சுமார் 23% வாக்குகளை பெறக்கூடும் என்று ஆளும் திமுகவால் எடுக்கப்பட்ட ஒரு ரகசிய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 'தி பிரிண்ட்' செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த இந்த சர்வே முடிவுகள், தமிழக அரசியல் களத்தில் தவெக ஒரு வலிமையான போட்டியாளராக உருவெடுக்கும் என்பதை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Mediagrass Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் ஓட்டுக்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பதிவு செய்து வருகிறார்கள்.

TVK DMK

இந்த சர்வே அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதா? என்பதற்கான எந்தவிதமான செய்தியும் இதுவரை இல்லை.

திமுக எடுத்த சர்வே

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர், சேகர் குப்தா, Print என்ற ஆன்லைன் வெப்சைட், யூடியூப் நடத்தி வருகிறார். இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸில் ஆசிரியராக இருந்தவர்.
இந்த சர்வேயின் சாராம்சம், "விஜய் தனித்து நின்றால் 23 சதவீதம் வரை வாக்கு எடுப்பதாக சர்வே கூறுகிறது. இது ஓரளவு சரியான கணிப்பே.. ஆனால் விஜய் 25 சதவீதம் வரைகூட செல்வார் என்பது என்னுடைய கணிப்பு.

அடுத்ததாக, விஜய், அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்தால் மொத்தமாக 35 சதவீதம் வாக்குகளும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 22 சதவீதம் வாக்குகளும் கிடைக்குமாம். அதாவது இவர்கள் மூவரும் இணையும்போது 15 சதவீதம் குறையும் என்று சர்வே சொல்கிறது.

விஜய் தனித்து போட்டி

அதேபோல விஜய் தனியாக போட்டியிட்டால் திமுக 45 சதவீதம் ஓட்டுக்களையும், அதிமுக, பாஜகவுடன் விஜய் கூட்டணி வைத்தால் திமுக 50 சதவீத ஓட்டுக்களையும் பெறும் என்றும் அந்த சர்வே கூறுகிறது இந்த கட்டுரையின் சாராம்சமே, விஜய் என்ன செய்தாலும், திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போகிறது என்ற கருத்தையே விதைப்பது போல உள்ளது.

பாஜக மீது அதிருப்திகள் தமிழகத்தில் உள்ளது என்றாலும், அது எம்பி தேர்தலில்தான் எதிரொலிக்கும்.. 2019, 2024 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த திமுக கூட்டணி, 2021-ல் ஏன் 75 சீட் வாங்கி படுதோல்வி அடைந்தது? எனவே சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்தாலும், அது பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தாது. 2026ல் திமுக வேண்டுமா? வேண்டாமா என்பதுதானே போட்டியே தவிர, பாஜக வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றி கிடையாது.

திமுக 50 சதவீதம் ஓட்டு

அதிமுக, பாஜக, விஜய் இணைந்தால் 35 சதவீதம் மட்டுமே பெற முடியும் என்று சர்வே சொல்கிறது.. ஏனென்றால் , பாஜகவுக்கான எதிர்ப்பு ஓட்டுகளும், அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலும்தான் 35 சதவீதம் பெறுவதற்கு காரணம் என்றும் அந்த் சர்வேயில் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அப்படியானால் அதிமுக, பாஜக கூட்டணி வைத்தால் 22 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று சர்வே சொல்கிறதே? அப்போது மட்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லையா? விஜய் தனித்து 23 எடுக்கும்போது, அதிமுக, பாஜக இணைந்தால் எப்படி வெறும் 35 சதவீதம் வரும்? இதுவே முரண்பாடாக உள்ளது.

திமுக எடுத்த சர்வே

இது திமுக எடுத்த சர்வே என்று, தி பிரிண்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.. அப்படியானால் திமுக சர்வே திமுகவுக்கு சாதகமாகத்தானே இருக்கும்? திமுக எடுத்த சர்வே, திமுகவுக்கு எதிராக இருந்து, அதை "தி பிரிண்ட்" நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தால் அதுதான் உண்மையான ஜர்னலிசம்..

அதைவிட்டுவிட்டு திமுக தனக்கு சாதகமான சர்வேயை வெளியிட்டிருப்பதை, ஜனநாயகத்துக்கு கேடாகவே பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+