ஏற்கனவே ரெண்டு.. 3-வதாக கார்த்திக்.. விபரீத கள்ளக்காதல்.. கடைசியில் செங்கல்பட்டே மிரண்டு போச்சு!
இளம்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்
சென்னை: இளம் தாய் கொல்லப்பட்ட விவகாரத்தில் கள்ளக்காதலனை செங்கல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்..!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சயின்ஷா.. 26 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால், சயின்ஷாவின் கணவர் இறந்துவிட்டார்... இதனால், குழந்தைகளுடன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்...

திருமணம்
கணவர் இருந்தபோது, கண்ணகி நகரில் வசித்து வந்திருக்கிறார்... அப்போது அவருக்கு பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால், முதல் குழந்தை பிறந்த அடுத்த சில வருடங்களிலே கணவன் இறந்துவிட்டார். அதனால், 2வதாக இன்னொரு நபரை திருமணம் செய்துள்ளார்.. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. இந்த குழந்தை பிறந்த சில நாட்களிலேயே, 2வது கணவரும் இறந்துவிட்டார்..

கொலை
எனவே, பாலவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்ற நபருடன் சயின்ஷாவுக்கு கள்ள உறவு இருந்து வந்ததாக தெரிகிறது... அம்மா வீட்டில் இருந்து கொண்டே, இந்த கள்ளக்காதலை சயின்ஷா வளர்த்து வந்துள்ளார். சயின்ஷாவின் அம்மா வேலைக்கு போய் மகளையும், பேரப்பிள்ளைகளையும் காப்பாற்றுகிறார்.. இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் சயின்ஷா அம்மா வேலைக்கு சென்றுவிட்டு, மாலை நேரம் வீட்டுக்கு வந்துள்ளார்.. அப்போது வீட்டிற்குள் மகள் தூக்கில் தொங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி துடித்துள்ளார்..

அதிர்ச்சி
மகளின் கழுத்து துப்பட்டாவால் நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததையும் பார்த்து அதிர்ந்து போனார்.. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தரவும், அவர்கள் உடனடியாக விரைந்து வந்து, சயின்ஷாவை பரிசோதித்து பார்த்தனர்.. ஆனால் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக உறுதி செய்துவிட்டு சென்றனர். இதற்கு பிறகுதான் கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தரப்பட்டது.. அவர்களும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

தலைமறைவு
வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான், துப்பட்டாவால் சயின்ஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.. அன்றைய தினம், சாயின்ஷாவின் கள்ளக்காதலன் கார்த்திக் வீட்டுக்கு வந்து போயுள்ளதும் உறுதியானது.. அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. இதனால், கார்த்திக் மீது மேலும் சந்தேகம் வலுவடைந்துள்ள நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார்.. அவரை தேடும் பணியும் தொடர்கிறது.. இதனிடையே, சாயின்ஷாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications