தமிழகத்தில் 2-வது நாளாக 2,000-த்தை தாண்டியது- 2,141 பேருக்கு கொரோனா- மேலும் 49 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் 2-வது நாளாக வியாழக்கிழமையன்றும் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும் 2,141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நாள்தோறும் 1,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியது.

மொத்தம் 52,334 பேருக்கு பாதிப்பு
வியாழக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 2,141 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரே நாளில் மொத்தம் 49 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆகவும் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 625 ஆகவும் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 37,070 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மாவட்டங்களில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையும் 37,070 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு அதிகம். செங்கல்பட்டில் இன்று மட்டும் 115 பேருக்கு கொரோனா உறுதியானது. செங்கல்பட்டில் மொத்தம் 3,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்னையில் 501 பேர் உயிரிழப்பு
சென்னையில்தான் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மொத்தம் 625 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் 501 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 2-வதாக செங்கல்பட்டில் 38 பேரும் திருவள்ளூரில் 32 பேரும் இறந்துள்ளனர்.

பிற மாவட்டங்களில் கொரோனா
சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் நிலவரம்: செங்கல்பட்டு - 115; கோவை- 23; கடலூர்- 17; தருமபுரி-2 ; திண்டுக்கல்- 2; ஈரோடு- 3; கள்ளக்குறிச்சி- 3; காஞ்சி-55; கன்னியாகுமரி 10; கரூர்-3 ; மதுரை- 9; நாகை- 9; நீலகிரி- 4; புதுக்கோட்டை- 6; ராமநாதபுரம்- 28; ராணிப்பேட்டை 18; சேலம்- 14; சிவகங்கை 15; தென்காசி 33; தஞ்சாவூர்-21; தேனி- 6; திருப்பத்தூர்- 4; திருவள்ளூர்-123; திருவண்ணாமலை 27; திருவாரூர்8; தூத்துக்குடி 26; நெல்லை- 19; திருப்பூர்- 4; திருச்சி- 14; வேலூர்- 55; விழுப்புரம்- 26; விருதுநகர்- 13.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications